.

Pages

Saturday, January 21, 2017

'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை!

அதிரை நியூஸ்: ஜன-21
சவுதி அரேபியாவின் தபூக் கடற்பிராந்தியத்தில் (Tabuk Coastal Area) தரைதட்டி எரிந்த நிலையிலுள்ள கப்பலின் பெயர் 'ஜார்ஜியஸ் ஜி' (georgious G) ஆனால் இது விபத்தில் சிக்கியதால் சவுதியின் டைட்டானிக் (Saudi Titanic) என்று அழைக்கப்படுவதுடன் சவுதியின் ஹகல் மாகாண (Hakal Province) மக்களின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1958 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 'சரக்கு கப்பலாக' கட்டப்பட்டு பல நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகளின் கைகளுக்கு மாறிக் கொண்டே இருந்தது. இறுதியாக 1978 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலாக 'மாவுப் பொருட்களை' (Flour) ஏற்றிக் கொண்டு சவுதிக்கு வந்து கொண்டிருக்கையில் சவுதியை சேர்ந்த தொழிலதிபர் ஆமர் முஹமது அல் சனூசி என்பவர் அந்தக் கப்பலின் முதலாளியாகி இருந்தார்.

அந்தக் கப்பல் தபூக் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பவளப் பாறைப்பகுதிகள் (Coral Rocks) நிறைந்த கடலில் தரைதட்டி சிக்கியது. கப்பலிலிருந்து மாவை வெளியேற்றவும், கப்பலை மறுபடியும் இயக்கவும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கப்பல் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் முழுவதும் எரிந்து நாசமாகி வீணானதுடன் இரும்பு பகுதிகள் மட்டுமே எலும்புக்கூடு போல் எஞ்சிய நிலையில் வெறும் காட்சிப் பொருளாக காட்சியளித்துக் கொண்டுள்ளது இந்த சவுதி டைட்டானிக்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.