அதிரை நியூஸ்: ஜன-19
ஷார்ஜாவில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் அதிகம் இறந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் பற்றிய விபரங்களை ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானியர்கள் முதலாவது இடத்திலும் இந்தியர்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
நேரடி சாலை விபத்துக்களில் இறந்தவர்கள் பற்றிய விபரம்:
1. பாகிஸ்தானியார் - 32 பேர்
2. இந்தியர்கள் - 30 பேர்
3. அமீரகத்தினர் - 23 பேர்
4. பங்களாதேஷிகள் - 13
5. பிலிப்பினோக்கள் – 3 பேர்
நடைபாதையில் செல்லும் போது வாகனம் மோதி இறந்தவர்கள்:
1. பாகிஸ்தானியர் - 45 பேர் மற்றும் 33 காயமடைந்துள்ளனர்
2. இந்தியர்கள் - 29 பேர்
3. பங்களாதேஷிகள் - 9 பேர்
விபத்துக்களால் காயமடைந்து கை, கால் ஊனமானவர்கள்:
1. அமீரகத்தினர் - 19 பேர்
2. இந்தியர்கள் - 14 பேர்
3. பாகிஸ்தானியர் - 11 பேர்
4. பங்களாதேஷிகள் - 4 பேர்
இத்தகைய விபத்துக்களுக்கான காரணங்களாக, அதிக வேகம், வாகனத்தை திடீர் என முன்னெச்சரிக்கை இன்றி திருப்புதல், ஓட்டும் போது கவனமின்மை, சாலையை கவனிக்காமல் வாகனத்துடன் உள்நுழைதல், எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல், சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்லுதல், தடம் மாறி மாறி சீரற்ற முறையில் வாகனத்தை செலுத்துதல், இரு வாகனங்களுக்கிடையே போதிய இடைவெளியை பேணதிருத்தல் மற்றும் பொறுப்பற்ற முறையில் ஓட்டுதல்கள் ஆகியவையே பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 90 சதவிகிதமான விபத்துக்கள் டிரைவர்களின் பொறுப்பற்ற போக்காலேயே ஏற்படுகின்றன.
மேற்படி போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 2000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 12 கரும்புள்ளிகளுடன் வாகனத்தையும் 30 நாட்களுக்கு முடக்கி வைக்கப்படும். சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்வதாலேயே விபத்துக்களில் சிக்குவோருக்கு மரணம் மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 800 திர்ஹம் அபராதமும் 8 கரும்புள்ளிகளுடன் 15 நாட்கள் வாகனமும் முடக்கப்படும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.