தஞ்சாவூர் மாவட்டம் 2018ம் ஆண்டு முதல் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் முழு சுகாதரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சத்துணவு மையங்களின் விவரங்களை குறுஞ்செய்தி அனுப்பிடும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (09.01.2018) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் 2018ம் ஆண்டு முதல் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத நிலையினை உறுதி செய்திடும் நோக்கில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுவில் உதவி இயக்குநர் நிலையில் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுவிற்கான பயிற்சி இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் சத்துணவு மையங்களில் தினசரி மதிய உணவு உண்ணும் மாணாக்கர்கள் விபரம் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி வாரியாக விபரங்கள் தினசரி பதிவு செய்திட புதியசெயலி (App) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் தினசரி அறிக்கை அனுப்பிட வேண்டும். இது தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக அனைத்து வட்டார அளவிலான அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதனை அலுவலர்கள் முறையாக பயன்படுத்தி தகவல்களை சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்ட தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளதால், தினசரி வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் ஊராட்சி கள அலுவலர்கள் ஆகியோர் கழிவறை பயன்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பொது மக்கள் பார்வைக்கு திறந்தவெளி மலம் கழித்தல் தீமைகள் குறித்து சுவர் விளம்பரங்கள் செய்ய வேண்டும். மேலும், கிராமப்பகுதிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செயல்படுகிறார்களா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊரக பகுதிகளில் சாலைப் பணிகள், சுகாதார வளாகங்கள், குடிநீர் வசதி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றிய/உதவி பொறியாளர்களிடையே முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் இந்துபாலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழ்ச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.