அதிரை நியூஸ்: ஜூன் 13
சவுதியில் புனித ரமலான் 27 ஆம் இரவில் இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளிலும் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் குவிந்தனர்
புனிதமிகு ரமலான் மாதத்தில் தான் புனிதமிகு திருக்குர்ஆன் முதன்முதலாக இறங்கத் துவங்கியது. அல் குர்ஆன் இறங்கிய இந்த இரவை லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிகு இரவாக அல்லாஹ் வழங்கியுள்ளதுடன் இந்த இரவை 1,000 மாதங்களைவிட சிறந்த இரவாகவும் இதில் நின்று வணங்கி பாவ மன்னிப்பு தேடுவோருக்கு பன்மடங்கு நற்கூலிகளை வழங்குவதாகவும் அல்லாஹ் கூறியுள்ளான்.
இந்த இரவு ரமலானின் கடைசி 10 இரவுகளில் வரும் ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகிய ஏதோவொன்றில் மறைந்திருப்பதாகவும் இந்த இரவுகளில் அதிகமதிகம் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு நன்மைகளை அடைந்து கொள்ளுமாறு ஏக இறைவனின் தூதரான நபி முஹமது (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் கடந்த 27 ஆம் இரவு அன்று புனிதமிகு பள்ளிகளான மக்கா மற்றும் மதினாவின் பள்ளிகளில் சுமார் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இரவு முழுவதும் தொழுகைகளிலும், பிரார்த்தனைகளிலும், பாவமன்னிப்பு தேடுவதிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும் ஈடுபட்டனர். எங்கெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்த இருபள்ளிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.