அதிராம்பட்டினம், ஆக.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் (35). தனது மனைவி மாலதி (30) மற்றும் பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அதன் அருகே, மற்றொரு குடிசை வீட்டில் மாரியப்பன் தாய் வள்ளி (56) வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாலதி வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் வைத்து இருந்த பணம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் கருகியது. தீ விபத்து குறித்து அறிந்த பல்வேறு தரப்பினர் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா அமீரக அமைப்பின் தலைவர் எல்.எம்.ஐ அப்பாஸ் சார்பில், நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மதிப்பில், மீன் பிடிக்க பயன்படும் வலை இன்று (ஆக. 14) செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட்டது. என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன், ஜீசான் அலி, முகமது பாருக், முகமது முகைதீன், ஜாகிர் உசேன், பஞ்சவர்ணம் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.