.

Pages

Friday, August 17, 2018

அதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ.40 ஆயிரம் திரட்டல்!

அதிராம்பட்டினம், ஆக.17
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணி அதிராம்பட்டினம் அனைத்து ஜூம்மா பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரளாவில் பெய்த பலத்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது.  இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நிவாரண நிதி திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிரையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் நிதி திரட்டும் பணி நடந்தது.

எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமையில், அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே நகர் ஜும்மா பள்ளிவாசல், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களின் முன்புற பகுதிகளில் நின்றுகொண்டு, தொழுகைக்கு வந்தவர்களிடம் துண்டு விரித்து நிதியைத் திரட்டினர்.

இன்று (ஆக.17) திரட்டப்பட்ட நிதி அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில தலைமை மூலம் உடனடியாக விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர். இதில், எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் அப்துர் ரஹ்மான், துணைத்தலைவர் சி.வி நடராஜன், செயலாளர் ஏ.சேக்தாவூது, துணைச்செயலாளர் எம். இக்பால், பொருளாளர் அகமது ரிழா மற்றும் அதிரை பேரூர் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிதி திரட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.