.

Pages

Monday, August 13, 2018

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு!

சிறுபான்மையினர்களுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (Pre Matric Scholarship) திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆணடிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு 30.09.2018 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு மொத்தம் 112419 மாணவர்களுக்கு புதியது (Fresh) மைய அரசால் 2018-19ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கு இலக்கு ஏதும் வரையறுக்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ மாணவியரின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.1 இலட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ மாணவியர் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் (1ம் வகுப்பு நீங்கலாக) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. மேற்காணும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவது ஒத்தி வைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.  தவறான ஆவணங்கள் / தகவல்களின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறுவதாக தெரிய வந்தால் கல்வி உதவித்தொகை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை ஒரே தவணையில் மீள வசூலிக்கப்படும்.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவ மாணவியரின் புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் பட்டியல், ஆளறிச்சான்று (ஆதார் எண் கட்டாயமில்லை) எனினும் ஆதார் விண்ணப்பித்ததற்கான ரசீது, புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு ஏதேனுமு; ஒன்று), செயல்நிலையில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகம், வருமானச் சான்று (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்), மதம் / சாதிச்சான்று  (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்) அல்லது ரூ.10க்கான நீதி மன்றசாரா முத்திரைத் தாள் உறுதிமொழிப்படிவம்), இருப்பிடச் சான்று ஆகியவை இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் 30.09.2018க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவ/மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31.09.2018க்குள் பார்வோடு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியுள்ள மாணவ /மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.