அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள, புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா புதன்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் செல்வராஜ் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக இராம.குணசேகரன் கலந்துகொண்டார்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள், யோகா பயிற்சி ஆகியன நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முன்னதாக, பள்ளி ஆசிரியை தட்சயணி வரவேற்றார். விழா முடிவில் பள்ளிச் செயலர் மகாலட்சுமி நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.