.

Pages

Thursday, August 23, 2018

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்!

தஞ்சாவூர் ஆக.23-
கேரளாவில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதற்காக  நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், மாணவர்கள் பங்கேற்ற நிதி வசூலிப்பு வசூலிப்பு பேரணியை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் க. ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர்கள் பேராவூரணி கருணாநிதி, குருவிக்கரம்பை மனோகரன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சற்குணம், குருவிக்கரம்பை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபி கிருஷ்ணா, ஆசிரியர்கள் அடைக்கலமணி, சரவணன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி தாலுகா அலுவலகம் தொடங்கி, சேது சாலை, முதன்மைசாலை, அறந்தாங்கி சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12 ஆயிரத்து 230 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.