.

Pages

Thursday, August 16, 2018

அப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக. 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சங்கத்து கொல்லை பகுதியில் வசிப்பவர் அப்துல் ரஹீம் (58). கடந்த மாதம் இவரது மூளையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டு, வாய் செயல் இழந்து முழுமையாக பேச இயலாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பட்டுக்கோட்டை நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. மகாலிங்கம் அவர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார். ஆயுட்கால தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளாராம்.

இவரது மனைவி இருதய நோயாளி. பிள்ளைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் தற்போது எங்கும் செல்வதில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால், மருத்துவ சிகிச்சை ~ மருத்துவ பரிசோதனை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளார். நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்துல் ரஹீம் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது மனைவிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி அப்துல் ரஹீம் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : SALMA A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 34583890518
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
0091 6385293200

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.