அதிராம்பட்டினம், ஆக. 21
அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய நிலங்களுக்கு ஆற்றுநீர் நிரப்ப வலியுறுத்தி,
அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் சார்பில், அதிரையில் எதிர்வரும் (23-08-2018) அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி தலைமையில், அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாய்த்தார்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தண்ணீர் செல்லும் வாய்க்காலின் குறுக்கே எவ்வித தடுப்பணைகளும் இல்லாமல் வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் (23-08-2018) அன்று வியாழக்கிழமை காலை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர் சுகன்யா, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாய்த்தார்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.