.

Pages

Sunday, August 19, 2018

அதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் திரட்டும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.19
கேரளத்தில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கு கொள்ளும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், வெள்ள நிவராணப் பொருட்கள் திரட்டும் பணி அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிவாரணப் பொருட்கள் திரட்டும் பணியை அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத்தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் தொடங்கி வைத்தார். அப்துல் மாலிக் தலைமையில், அவ்வமைப்பின் உறுப்பினர்கள், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பெரிய கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை, கல்லூரி முக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நிவராணப் பொருட்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில், பிஸ்கட், பிரட், ரஸ்க் பாக்கெட், தண்ணீர் பாட்டில், போர்வை, பால் பவுடர் உள்ளிட்ட ரூ. லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வர்த்தகர்கள், பொதுமக்கள் வழங்கினர்.

இதுகுறித்து அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத்தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் கூறியது;
'மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு, அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், மினி லாரி அளவுக்கான நிவாரணப்பொருட்கள் திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதிகளில் திரட்டப்படும் நிவாரணப் பொருள்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் மூலம் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.