.

Pages

Saturday, August 11, 2018

தண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் (படம்)

பட்டுக்கோட்டை, ஆக. 11:
சாகுபடிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் பொதுப்பணித்துறை தகவல் தொடர்பு உயர்நிலை கோபுரத்தில் ஏறி முதல்சேரி கிராம விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பட்டுக்கோட்டையிருந்து 3 கி.மீ. தொலைவில் முதல்சேரி கிராமத்திலுள்ள ராஜாமடம் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை வரை பாசனத்துக்கு தண்ணீர் வரவில்லை.

இதையடுத்து, முதல்சேரி உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த 40}க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த அலுவலர்களிடம் ராஜாமடம் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் கிராமங்களில் முதல் கிராமமான முதல்சேரிக்கே இதுவரை தண்ணீர் வரவில்லை. எஞ்சியுள்ள செட்டியக்காடு, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், மாளியக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, காசாங்காடு, நடுவிக்காடு, மிலாரிக்காடு, ஏரிப்புறக்கரை, ராஜாமடம் உள்பட  20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எப்போது தண்ணீர் வரும் என கேட்டு தர்கம் செய்தனர். 

இதற்கு பதிலளித்த அலுவலர்கள், கல்லணைக் கால்வாயிலிருந்து திறந்து விடப்பட்ட  நீர், வழியில் சில இடங்களில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்து விடப்படுவதாவும், ஒரு சில தினங்களில் முதல்சேரி பகுதிக்கு ராஜாமடம் வாய்க்காலில் கண்டிப்பாக தண்ணீர் வந்து விடும் என கூறினர்.

இதை ஏற்க மறுத்த விவசாயிகள், கர்நாடகா அணைகளிலிருந்தும், மேட்டூர் அணையிலிருந்தும் திறக்கப்பட்டுள்ள அதிக அளவு தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. விவசாயத்திற்கு  மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்குதான் காரணம் என கூறி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, முதல்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் ராமசாமி, பவளக்கண்ணு, பீட்டர் ஆகிய 3 பேர் திடீரென பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்த தகவல் தொடர்பு உயர்நிலை கோபுரத்தில் ஏறி  நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்சேரி பகுதி கிராமங்களுக்கு ராஜாமடம் வாய்க்காலில் பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் விடும் வரை கீழே இறங்க மாட்டோம் என கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், நாடியம்பாள்புரம் விஏஓ  ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில்,  தஞ்சையில் அலுவலக கூட்டத்திலிருந்த பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை துணைக் கோட்ட பொறியாளர் அன்பரசன் வட்டாட்சியரின் செல்லிடப்பேசியில் விவசாயிகளிடம் பேசினார்.  வரும்
திங்கள்கிழமைக்குள் (ஆக.13) முதல்சேரி பகுதி கிராமங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வந்து சேரும் என உறுதியளித்தார். இதையடுத்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் 1 மணி நேரம் உயர்நிலை கோபுரத்தில் இருந்த 3 விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கீழே இறங்கினர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.