.

Pages

Sunday, August 19, 2018

தண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு !

அதிராம்பட்டினம், ஆக. 19
அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய நிலங்களுக்கு ஆற்றுநீர் நிரப்ப வலியுறுத்தி,
அதிரையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
டெல்டா சாகுபடிக்கு கடந்த ஜூலை 22 ந் தேதி கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்தும், கடைமடை பாசனப் பகுதியான அதிராம்பட்டினத்தில் வறண்டு காணப்படும் குளங்கள், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேராததைக் கண்டித்து, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் (அதிரை பேரூராட்சி அலுவலகம் அருகில்) சாலை மறியல் போராட்டம் எதிர்வரும் (23-08-2018) அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாகவும், இதில், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.