அதிராம்பட்டினம், ஆக.28
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.கே அப்துல் சுக்கூர். இவரது மகன் ஏ.எஸ் முகமது ஆதிப் (13). காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர், அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFT) தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 14-வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி, நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆக.29 ந் தேதி நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகமது ஆதிப் கலந்துகொண்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 16 ந் தேதி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநிலப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், அதன் தலைவர் எம்.கே சம்சுதீன் பாராட்டி சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். அருகில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, முன்னாள் செயலர் டி. முகமது நவாஸ்கான், பாவா பகுருதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.