.

Pages

Saturday, August 11, 2018

துபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய நிறுவனம் திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.அஸ்ரப் அலி (43). துபையில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தனது நண்பர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருடன் இணைந்து, துபை தேரா அல் முரார் பகுதியில் எம்.ஆர்.கே கட்டிடத்தில் புதிதாக தொடங்கி உள்ள 'டாப் லெசி ஷாப்' நிறுவனத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துபை வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம். அஸ்ரப் அலி கூறியது;
கடந்த 22 ஆண்டுகளாக துபையில் பணியாற்றி வருகிறேன். இதில், 20 ஆண்டுகளாக சுயமாக தொழில் நடத்தி வருகிறேன். இதன் ஒரு பகுதியாக எனது நண்பர் முஸ்தபா உடன் இணைந்து லெசி ஷாப் நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். இங்கு, தமிழக ருசியுடன் கூடிய லெசி, பிரஸ் ஜூஸ், குளிர் பானங்கள், மில்க் சேக், சோடா, குல்பி, ஐஸ் காபி, ஐஸ் கிரிம் உள்ளிட்ட பல்வேறு குளிரூட்டப்பட்ட பானங்கள் மிகக்குறைந்த விலையில் உயர்தரத்தில் உடனுக்குடன் தயார்செய்து வழங்கப்படும். துபை வாழ் தமிழர்கள், எங்களது புதிய நிறுவனம் மேம்பட தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்' என்றார்.
தொடர்புக்கு: 04-2970062 (Dubai)
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.