.

Pages

Saturday, August 11, 2018

TNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு இன்று (11.08.2018) தஞ்சாவூர் அரசர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது.

இத்தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வுக்கு தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தேர்வுக்கு 76 நபர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். 65 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். வருகை சதவிகிதம் 85.5 ஆகும். தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் பாடத்தேர்வும், மாலையில் பொது அறிவுத் தேர்வும் நடைபெறுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கல்லணைக்கு நேற்றைய தினம் சுமார் 12,000 கன அடி தண்ணீர் வந்தது.  தற்போது 16,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  நாளைய தினம் கொள்ளிடத்தில் தண்ணீர் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அங்காங்கே கரையோரம் வசிக்கும் பொது மக்களும், கால்நடைகளை எடுத்துச் செல்பவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழல் நிறைந்த பகுதிகளில் நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளிடம் கரைகளில் வட்டாட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முகாமிட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கல்லணைக்கு சுமார் 30,000 கன அடி தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளிடத்தில் 30,000 முதல் 40,000 வரை கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்லணைக் கால்வாயில்  கூடுதலாக தண்ணீர் 2650 கன அடி திறக்கப்பட்டுள்ளதால், ஓரிரு நாட்களில் அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடையும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், இந்த ஆண்டு அனைத்து ஏரி குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் தொடர்புடையது ஆகையால், ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளம் நிரம்பு வருகின்றது. தற்போது முதற்கட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. அதன் உபரி நீர் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட குளங்களுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.