அதிராம்பட்டினம், ஆக. 16
உலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் ரூ.1.32 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகா குளத்தில் நடைபெற்ற தேசிய அளவிளான வலுதூக்கும் போட்டியில் (Power Lifting) வெற்றி பெற்று வருகிற செப்டம்பர் மாதம் 2 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கு பெற உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.பி.ஏ. மாணவி எஸ்.லோகபிரியாவிற்கு கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அப்போட்டியில் பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை ரூ.1,32,000-த்தை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது. இந்த தொகையை கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் மாணவி எஸ். லோகப்பரியாவிடம் வழங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் முதல்வர் ஏ. முகமது முகைதீன், பேராசிரியர்கள் ஓ.எம் ஹாஜா முகைதீன், என். ஜெயவீரன், எம். முகமது முகைதீன், பி.கணபதி, ஏ.ஷேக் அப்துல் காதர், மற்றும் இதர பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் மு.முருகானந்தம் செய்திருந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.