.

Pages

Friday, August 24, 2018

தண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஆக.24
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மேட்டூர் அணை திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பெருமகளுர், திருவோணம், ஒரத்தநாடு போன்ற கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததைக் கண்டித்து, அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.  இதில், போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து தண்ணீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்க நிர்வாகிகள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.