அதிராம்பட்டினம், ஆக.31
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பாக 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு கோலாகலாமாக தொடங்கியது.
இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், காரைக்குடி, தொண்டி, கீழக்கரை, நாகப்பட்டினம், திட்டச்சேரி, லால்குடி உள்ளிட்ட 22 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில், அதிராம்பட்டினம் ESC, அதிராம்பட்டினம் FRIENDS ஆகிய அணிகள் மோதினர். போட்டி நடுவர்களாக பாரதி, ஆசிப் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
முன்னதாக, தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் கீழத்தெரு சங்க நிர்வாகிகள் தாஜுதீன், சேக்தாவூது, முகமது முகைதீன், எம்.ஏ அப்துல் ஜலீல், மான் ஏ. சேக், ஜியாவூதீன், தாஜுதீன், ஜெஹபர் அலி, தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லா, தரகர் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகி அகமது அனஸ், கரையூர் தெரு பஞ்சாயத் நிர்வாகிகள் முத்துக்குமரன், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகி முகமது முகைதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர், ஜபருல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர் போட்டியை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பில், அதன் நிர்வாகிகள் அஜ்மல்கான், முகமது சாலிகு, அன்வர், சுல்தான், நிஜாம், ராசிக், நூருல் அமீன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியை பைத்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.
நாளை (செப்.1), வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரமும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாள் போட்டிகளைக் காண ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.