.

Pages

Sunday, March 1, 2020

CAA.NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்!

அதிராம்பட்டினம், மார்ச்.01
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் இன்று (01-03-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிஏஏ க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஜாவியா சாலை, பெரிய ஜும்மா பள்ளி, பழைய அஞ்சலக சாலை, செக்கடித்தெரு, கடற்கரைத்தெரு, ஆஷாத் நகர், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, சிஎம்பி லேன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.