.

Pages

Friday, July 18, 2014

தூய்மைபடுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடும் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சியின் நிர்வாக எல்லைக்கு  உட்பட்ட காட்டுப்பள்ளி தெரு பகுதியில் தேங்கி நின்ற கழிவு நீர் வாய்க்கால் மற்றும் செடியன் குளக்கரையின் இருபுறமும் மண்டிக்கிடந்த முட்புதர்களையும் தூய்மை படுத்தும் பணியில் அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப் மும்முரமாக ஈடுபட்டார். இதனால் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப் நம்மிடம் கூறுகையில்....
'அதிரை பேரூராட்சி மற்றும் இப்பகுதியில் வாழும் சில தன்னார்வலர்களின் பொருளாதார உதவியால் கழிவு நீர் வாய்க்கால் தூர் வாரப்பட்டது. இதற்காக இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செடியன் குளக்கரையின் இருபுறமும் ஏராளமான முட்புதர்கள் மண்டி காணப்பட்டன. இப்பகுதியில் புழங்கும் பொதுமக்களும், குளக்கரையின் மீது செல்லும் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தது. இதை கருத்தில் கொண்டு இருபுறமும் மண்டிகாணப்படும் முட்புதர்களை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அப்புறப்படுத்தி வருகிறோம். இந்த பணிகள் நாளையும் தொடரும். பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்' என்றார்.








      

8 comments:

  1. சகோதரர்களுக்கு ....லத்தீப் என்பது அல்லாஹ்வின் பெயர் இந்த பெயரை கொண்ட நபர்களை நாம் அப்துல் லத்தீப் என்று கூறி அழைப்பதே தாள சிறந்தது .

    ReplyDelete
    Replies
    1. அன்புச்சகோதரர் அபூ பக்கர்,

      மிகச் சரியாக கூறினீர்கள். இவரது முழுப்பெயர் அப்துல் லத்திப் - பதிவில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது - மிக்க நன்றி !

      Delete
  2. சகோ. லத்திப்

    வெல்டன் !

    இவரைபோல் ஏனைய கவுன்சிலர்களும் அவர்களின் பகுதிகளில் தூய்மை படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட முயற்சிக்கலாம்.

    அப்படியே செடியன் குளக்கரை மேட்டின் மீது பேரூராட்சியின் சார்பில் ஒரு மெர்குரி லைட் போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதிகாலை நேரங்களின் தொழுகை மற்றும் வாக்கிங் செல்வர்களுக்கு சிரமமில்லாமல் இருக்கும்

    ReplyDelete
  3. அப்துல் லத்தீப் அவர்களுக்கு அல்லா அருள் புரிவானாக !மேலும் ஒரு கோரிக்கை நமதூர் ஜாவியால் ரோட்டில் ஜாவியாளுக்கு அருகில் தெருவிளக்கு இல்லாமல் அந்த ரோட்டில் செல்பவர்கள் மிகவும் அவஹி படுகிறார்கள். அதற்கு தெருவிளக்கு அமைத்து தந்தால் நன்றாக இருக்கும் .சகோ தரர் அப்துல் லத்தீப் இதில் கவனம் செலுத்துவாரா?

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஸஹர் ரமழான் முபாரக்.‎

    இப்பகுதியில் சீர்திருத்தம் செய்யும் நமது சகோதரர் அப்துல் லத்தீப் ‎அவர்களுக்கு பாராட்டுதலும் வாழ்த்துக்களும்.‎

    கடந்த 18/01/2014 அன்று நமது அதிரை நியூஸ் வலைதளத்தில் “செடியன் ‎குளத்து இருட்டில் மாட்டிக்கொண்ட நான்” என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் ‎எழுதி இருந்தேன். அது முழுக்க முழுக்க இரவு நேரங்களில் அப்பகுதில் ௦௦௦ ‎ஒரு துளி வெளிச்சம்கூட இல்லாமல் கடும்மையிருட்டாக இருக்கின்றதை ‎சுட்டிக் காட்டியதாகும். ‎

    ஆகவே, சகோதரர் அப்துல் லத்தீப் அவர்களை அந்த இடத்தில் போதுமான ‎வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்கை பொருத்தி அவ்வழியே செல்லும் ‎மக்களை இருட்டில் இருந்து பாதுகாக்கும்படி அன்புடன் கேட்டுக் ‎கொள்கிறேன். ‎

    http://www.adirainews.net/2014/01/blog-post_18.html

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  5. இப்பகுதியில் சீர்திருத்தம் செய்யும் நமது சகோதரர் அப்துல் லத்தீப் ‎அவர்களுக்கு வாழ்த்துக்கள்.‎
    by west yaseen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.