.

Pages

Tuesday, July 29, 2014

பெருநாள் கொண்டாட்டத்தில் ஒருநாள் – இறுக்கமான மனநிலை !

நமக்கு வருடத்தில் கொண்டாட கிடைப்பது இரண்டு பெருநாள்கள். அந்த இரண்டையும் எந்த ஒரு தங்கு தடையின்றி விமரிசையாக கொண்டாட இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.

பெருநாட்களில் மற்ற நாட்களைவிட தொழுதகையோடு கணினியின் முன் உட்கார்ந்து சொந்தங்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு, பரிட்சையப்பட்ட வலைதளங்களுக்கு செய்திகள், வாழ்த்துகள், பின்னூட்டம் அளிப்பது வழக்கமாகி இருந்து வருகிறது. இதற்க்கு மின்சாரம், கணினி, இன்டர்நெட் இம்மூன்றும் மிக மிக அவசியம், இம்மூன்றில் ஒன்று இல்லையென்றால் கதை கந்தல்தான்.

29/07/2014-செய்வாய்க்கிழமை அதிகாலை 5.15-மணி முதல் நமதூரில் இன்டர்நெட் சேவை வேலை செய்ய வில்லை.

CURRENT இருக்குது, COMPUTER சரியாக வேலை செய்யுது, PHONE LINE சரியாக இருக்குது. DSL சிக்னல் சரியாக இருக்குது, INTERNET சிக்னல் கிடைக்க வில்லை.

(1) திரு. பாலு அவர்கள். (B.S.N.L. ADIRAMPATTINAM)
இவரை தொடர்பு கொண்டால், அவரின் தகப்பானாரின் கருமாதிக்கு விருப்பில் இருப்பதாக பதில் வந்தது.

(2) T.T.A (Telephone Technician Assistant) திரு.ரமேஷ் அவர்கள். (B.S.N.L. ADIRAMPATTINAM)
இவர்களை தொடர்பு கொண்டால், அவர் விடுப்பில் இருப்பதாக பதில் வந்தது.

பிறகு:
(3) DE திரு. பிரகலனாதன், ( B.S.N.L. ADIRAMPATTINAM + PATTUKKOTTAI)
இவரை தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன், அதற்க்கு அவர் நான் தற்போது நீண்ட தொலைதூரத்தில் இருக்கின்றேன், இருந்தாலும் தொலைபேசியில் மற்றவர்களிடம் பேசுகின்றேன் என்று சொன்னார்.

பிறகு:
(4) DE திரு.ராஜேந்திரன் (B.S.N.L. PATTUKKOTTAI + KUMBAKONAM)
இவரை தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன், அதற்க்கு அவர் இது காமன் புராப்லமாக இருக்கலாம், என்னா என்று பார்க்க சொல்றேன் என்று சொன்னார்.

பிறகு:
(5) DGM திரு.சுப்பிரமணியம் ( B.S.N.L. THANJAVUR DISTRICT.)
இவரை தொடர்பு கொண்டு மேற்படி விபரத்தையும் மேலும் மேலே கூறப்பட்ட அலுவலர்களிடம் பேசினதையும் சொன்னேன், அதற்க்கு அவர் அப்படியா உங்களுக்கு பண்டிகை நாளாச்சே, நான் எப்படியும் இதை உடனே சரிசெய்ய சொல்றேன் என்று சொன்னார்.

இவ்வளவும் அதிகாலை 5.30-மணியில் இருந்து 6.30-மணிவரை நடந்த சங்கதியாகும்.

இறுதியாக 7.45-மணிக்கு இன்டர்நெட் வேலை செய்ய ஆரம்பித்தது. நமக்காக களத்தில் இறங்கிய  திரு.சுப்பிரமணியம் DGM / திரு.ராஜேந்திரன் DE / திரு.பிரகலனாதன் DE. ஆகியோர்களுக்கு அதிராம்பட்டினம் மக்கள் சார்பாக நன்றிகலந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
K.M.A.ஜமால் முஹம்மது..

12 comments:

  1. திடீர் பழுத்தால் அதிரை நியூஸ் மிகவும் பாதித்தது. உடனே சம்பந்தப்பட்ட துறை அலுவர்களின் கவனத்துக்கு எடுத்துசென்ற அன்புச்சகோதரர் KMA ஜமால் முஹம்மது அவர்களுக்கு அதிரை நியூஸ் குழுவின் நன்றியும் பாராட்டுதலும்

    ReplyDelete
  2. Hey Man! You have done a very good job. I really appreciating you . Thank You.

    ReplyDelete
  3. ஜமால் காக்கா சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து சாதித்து உதவியமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. களமிறங்கி அரிய பணி செய்த ஜமால் காக்காவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  5. //Hey Man! You have done a very good job. I really appreciating you . Thank You.//
    Dear Bro......Mohamed Jaleel, When you appreciating some one for some thing use proper grammatical or respect full words instead of 'Hey Man' is not a word to use in this circle.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.