அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் நெருக்கடியாக காணப்பட்டது. அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் வாகன நெருக்கடியை சரிசெய்தனர். தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் குடிநீர் பாக்கெட், பேரித்தம் பழங்கள் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் கொள்கையற்றவர்களின் தடுமாற்றங்கள் பற்றியும் மிக தெளிவாக விளக்கினார்
ReplyDelete"கொள்கையில் உறுதியாக நிலைக்க செய்த
அல்லாஹுக்கே எல்லா புகழும்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
பெருநாள் திடல் வசூல் ரூபாய் = 41,800/-
(பித்ரா வசூல் ரூபாய் = 1,42,650/-
இதில் 450 குடும்பங்கள் பயன் அடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்...
செய்தி வெளியிட்ட அதிரை நியூஸ் இணையதளத்திற்கு நன்றி....