.

Pages

Friday, July 18, 2014

295 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதா !?

295 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சிதறி கிடப்பதாக ராய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்த நிலையில்,  கிராபோவோ என்ற கிராமத்தின் அருகே விமானம் நொறுங்கி கிடக்கும் இடத்தில் குறைந்தது 100 சடலங்களாவது சிதறிக்கிடப்பதை தான் பார்த்ததாக மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு சிதறி கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது உள்நாட்டுப் போர் நடந்து வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதி அருகே விமானம் சென்று கொண்டிருந்துபோது,அதன் மீது ஏவுகணை ஒன்று  தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மலேசிய ஏர்லைன்ஸ் தனது டுவிட்டர் தளத்தில், உக்ரைன் வான்வெளியில் பறந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

விமானத்தில் 280 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 15 ஊழியர்களும் பயணம் செய்து கொண்டிருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்ய எல்லையருகே விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்கும் விமானம் நுழையவேண்டிய தருணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

விமானம்,  ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் சர்வதேச அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

தங்களுக்கும் விமானம் விழுந்து நொறுங்கியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்,விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும்  உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் 33 ஆயிரம் உயரத்தில் பறக்கும் விமானத்தை வீழ்த்துவது என்பது சாதாரண ஏவுகணைகளால் இயலாது என்ற கருத்தையும் நிபுணர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

ராடார் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளோ, விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளோதான் இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்தும், எழுந்திருக்கும் நெருக்கடி குறித்தும் விவாதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ந்தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது.

இதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. விமானம் என்ன ஆனது என்றும் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக சர்வதேச விசாரணையம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இன்னொரு விமானம் விபத்திற் குள்ளாகியுள்ளது.


2 comments:

  1. http://wonderfulengineering.com/live-malaysian-airlines-mh-17-crash-images/

    ReplyDelete
  2. அமேரிக்கா ரஷியா இந்த இரு நாடுகளுமே போட்டி போட்டுக் கொண்டு பயங்கரவாதத்திற்கு துணை போகின்றன, அதன் விளைவு தான் இது .

    ஏற்கனவே MH 370 காணமல் போனது மருமம் இருக்கு இப்போ இதுவேற போற போக்க பார்த்தா 3 வது உலக போர் வந்தாலும் வரலாம்

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.