.

Pages

Thursday, July 31, 2014

புனித ரமலான் மாதத்தில் 570 நிமிடங்கள் மாத்திரம் மின்தடை செய்த மின்சார வாரியத்திற்கு நன்றி அறிவிப்பு !

நோன்பு காலத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பப் படிவத்தை பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு அஞ்சல் துறை மூலமாக அனுப்பட்டது, அதை “(ரமழான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி என்ற தலைப்பில் 21ஜூன்2014 அன்று

http://www.adirainews.net/2014/06/blog-post_8052.html

இந்த வலைத்தளத்திலும் பதிந்து இருந்தோம்.

பொதுமக்களின் உணர்வுகளையும், நோன்பின் மகிமையையும் உணர்ந்த மின்சார வாரியம் நமக்கு பேருதவியாக செயல்பட்டதை இதில் பதியப்பட்டுள்ள பட்டியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

ஆகவே, பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு நன்றிகலந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரியப்படுத்துகின்றேன்.

வாழ்க மின்சார வாரியம், வளர்ந்து செழிக்க உங்களின் அன்பான சேவை.

இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.


8 comments:

  1. ஜமால் காக்கா அவர்களே உங்களை அடுத்த MP என்று கூறுவதா அல்லது MLA என்று கூறுவதா ? எனுக்கு ஒன்றும் தெரியல .....
    என்னுடைய காக்கா அதிரை புகாரியிடம் கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில்............ He is the one presently need for our society as a central Minister.........

    ReplyDelete
  2. மின்சார வாரியத்திற்கு நன்றி !

    நேரம் ஒதுக்கி துல்லியமாக கணக்கீடு செய்து அட்டவணை தயாரித்தது புதிய முயற்சி !

    ஜமால் காக்காவின் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஜமால் காக்காவின் சேவை மற்றும் திறமையை நமதூர் வாசிகள் அறிந்து பொறுப்பான ஒரு அரசுப் பதவியில் அமர்த்த முயற்ச்சித்தால் அனைவரும் பயன் பெறலாம்.. அதற்க்கு நமதூர் செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் தான் முயற்ச்சிக்க வேண்டும். பொதுநலன் கருதி பொறுப்பான ஜமால் காக்காவை அரசுப் பணியில் அமர்த்த முயற்ச்சிக்கலாமே.!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.
      எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். முழு ஒத்துழைப்பு கொடுத்து பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.