நாடு முழுவதும் உள்ள தங்க நகைக்கடைகளில், பெரும்பாலான கடைகளில், தங்க நகை சேமிப்பு திட்டம் உள்ளது. இதில் சேரும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தொகையை, மாதந்தோறும் செலுத்தி வர வேண்டும். குறைந்தபட்சம், 15 மாதம் முதல், அதிகபட்சம், 36 மாதங்கள் வரை, தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தி வர வேண்டும்.குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பணம் செலுத்திய பிறகு, தங்க நகை வாங்கிக் கொள்ளலாம். இதில், தங்க நகை மட்டும் தான் வாங்க முடியும்; தங்க நாணயங்கள், பிற பொருட்களை வாங்க முடியாது. இத்தகைய திட்டத்தில், ஒவ்வொரு தங்க நகைக்கடைகளிலும் ஏராளமானோர், தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். இத்தகைய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, பல லட்சம் இருக்கும் எனவும், இந்த திட்டங்களில் புழங்கும் பணத்தின் அளவு, பல லட்சம் கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.இந்த வகையிலான சேமிப்பு திட்டத்திற்கு, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 முதல், தங்க நகை சேமிப்பு திட்டத்திற்கு, பல கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புதிய, கம்பெனிகள் சட்டம் 2014 படி, இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் :
தங்க நகை சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடம் இருந்து டிபாசிட் பெறும் முதலீட்டு திட்டமாகவே கருதப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சம் 12 சதவீதத்திற்கு அதிகமாக பலன்களை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கக் கூடாது. தங்க நகைக்கடைகள் தங்க நகை சேமிப்பு திட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு தொடர முடியாது. எவ்வளவு வாடிக்கையாளர்களை வேண்டுமானாலும் சேர்க்க முடியாது. அதிகபட்சம் 11 மாதங்களைத் தாண்டி முதலீட்டு திட்டத்தை தொடர முடியாது. அவ்வாறு தொடர வேண்டி இருந்தால் தங்க நகைக்கடையின் மொத்த சொத்து மதிப்பில் அல்லது மொத்த விற்று முதலில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சேமிப்பு திட்டத்தில் முதலீட்டாளர்களை சேர்க்க முடியும். இத்தகைய கெடுபிடியால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல தங்க நகைக்கடைகள் தங்க நகை சேமிப்பு திட்டத்தை ரத்து செய்து முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுத்து வருகின்றன.
இந்த திட்டத்தில் செலுத்திய பணத்தை முதலீட்டாளர்கள், பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம். நகைகளாகவும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. அதுபோல், செலுத்திய மாதந்திர முதலீட்டு தொகையில், ஒன்றிரண்டு மாதத்தொகையை கூடுதலாக கொடுத்து, முதலீட்டாளர்களை திருப்திபடுத்தி வருகின்றன.
கெடுபிடிகளால் தங்கள் வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் இழக்க விரும்பாத தங்க நகைக் கடைகள் நகை சேமிப்பு திட்டத்தை 11 மாதங்களாக குறைத்துள்ளன. சில இந்த சேமிப்பு திட்டமே வேண்டாம் என, வெளியேறிவிட்டன. கடந்த ஏப்ரல் 1 முதல், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய உத்தரவு, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முழுமையாக பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளதால், தங்க நகைக்கடைக்காரர்கள் சேமிப்பு திட்டத்தை மாற்றியமைத்து வருகின்றனர்.
நகை சீட்டில் சேர்ந்து நகை வாங்குவதை வீட மொத்தமாக பணம் சேர்ந்து நகை வாங்குவதில்தான் அதிக லாபம் என்பதை வலியுறுத்தியும், தங்க நகை சேமிப்பு திட்டத்தை ஏற்று நடத்தும் நிறுவனங்களால் பணம் வசூல் செய்வதற்காக நியமிக்கப்படும் வெளிமாநில நபர்களால் எற்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட 'கவனம் : தங்க நகைச்சேமிப்பு திட்டம் !' என்ற பெயரில் கடந்த [ 08-12-2012 ] அன்று 'சமூக விழிப்புணர்வு பக்கங்களில்' பதியப்பட்ட விழிப்புணர்வு ஆக்கம் இதோ உங்களின் பார்வைக்கு...
http://nijampage.blogspot.in/2012/07/blog-post_17.html
முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் ( Liquid Asset ) என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.
சரி விசயத்துக்கு வருவோம்...
தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கத்தில் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.
நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்து, அவர்களின் கையில் விண்ணப்பங்களை திணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தங்க நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகள் :
1. உங்களது மாத தவணையை 20 / 15 மாதங்கள் ஒவ்வொரு அங்கத்தினரும் சேலுத்த வேண்டும். பணம் செலுத்தும் போது அதற்குறிய ரசீதை பெற்றுக்கொள்ளவும்.
2. பிரதி ஆங்கில மாதம் 10-ம் தேதிக்குள் மாதத்தவணை தொகையை செலுத்தி கண்டிப்பாக பதிவேட்டை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
3. பிரதி ஆங்கில மாதம் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் எங்களது கடையில் தங்க நகை சிறுசேமிப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு நடைபெறும். பரிசு விழுந்தவர்கள் பரிசு தொகைக்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு தவணைகள் கட்ட வேண்டிய தேவையில்லை.
4. மாதத்தவணை தவறாது 20 / 15 மாதங்கள் தொடர்ந்து செலுத்திவருபவர்கள், 20 / 15 மாதங்கள் முடிந்ததும் போனஸ் தொகையை சேர்த்து அன்றைய விலைக்கேற்ப தங்க நகைகள் பெற்றுக்கொள்ளவும்.
5. பரிசு விழாதவர்களுக்கு மட்டும் போனஸ் தொகை உண்டு, விற்பனை வரி கிடையாது. வரியை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.
6. மாதத்தவணை தவறி செலுத்துபவர்கள் தங்களின் போனஸ் தொகயை இழக்க நேரிடும்.
7. மாதத்தவணை தொடர்ந்து கட்டமுடியாமல் நடுவில் நிறுத்தி விடும் அங்கத்தினர்கள் 20 /15 மாதத்தவணை முடிந்த பின்பு அன்பளிப்பு சாமான் கிரயத்தை செலுத்திவிட்டு கட்டியுள்ள தொகைக்கு நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
8. எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.
9. மாதத்தவணை தொடர்ந்து செலுத்தி வரும் அங்கத்தினர்களால் 20 / 15 மாதம் முடியும் முன்பு நகைகள் வாங்க விரும்பினால் செலுத்திய தொகை போக பாக்கி மாதங்களின் தவணை தொகையையும் அன்பளிப்பு சாமான் கிரயம் ரூ 500/- ஐயும் செலுத்திவிட்டு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
10. முத்திரை பவுன், தங்க கட்டிகள் மேற்படி சேமிப்பிற்கு தரப்பட மாட்டாது.
11. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தவணைத் தொகை ரசீதுகளையும் இந்த பதிவு புத்தகத்தையும் தங்க நகைகள் வாங்கும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
12. இந்த பதிவு புத்தகத்தை தவறவிட்டு விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
13. பிரதி மாதம் செலுத்தும் தொகைக்கு வெளியூர் செக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
என இது போன்ற நிபந்தனைகளுடன்...
மாதம் 500 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 7,500 ரூபாய் கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஐநூறு ரூபாய் சேர்த்து 8,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக 200 ரூபாய் மதிப்புள்ள கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் நம்மிடம் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படும் தொகையை பிற தொழில்களில் அவர்களால் முதலீடு செய்யபட்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கப்படுகின்றனர் என்பது பலரின் கருத்துகளாக இருக்கின்றன.
சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.
3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.
4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.
6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.
மூக்குத்தி இல்லைன்னா கொலுசு தான் கிடைக்கும்... இதுல பேன் தட்டு இதெல்லாம் ப்ரீயா தரோமின்னு ஒரு விளம்பரம் வேற.. அதெல்லாம் உடுங்க.. மூங்கில் கைப்பிடி பை / இருபதுரூபா பெறாத பை ப்ரீயா கொடுத்தா கூட அதுக்குன்னே குறிப்பிட்ட கடைக்கு சீட்டு சேருகிற கூட்டமும் இருக்கு.. லேடீஸ் தான் அதிகம். இவர்களின் டார்கெட் குடும்ப தலைவி தான்.....
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஸஹர் ரமழான் முபாரக்.
இது மட்டுப் படுத்த வேண்டிய திட்டம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com