இன்று [ 18-07-2014 ] வெள்ளிக்கிழமை மாலை டேரா துபாய் ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரகத்தில் இயங்கி வரும் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் [ TIYA ] சார்பாக மேலத்தெரு மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு இஃப்தார் 2ஆம் ஆண்டு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.
வந்திருந்த அனைவரையும் TIYA வின் அமீரகத்தலைவர் அப்துல் மாலிக், செயலாளர் நூர் முஹம்மது [ நூவண்ணா ], பொருளாளர் அப்துல் காதர் உள்ளிட்ட சக நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
இஃப்தார் உணவுக்காக அதிரையின் பிரத்தியேக சுவையுடன் கூடிய நோன்புக்கஞ்சியுடன் கடப்பாசி,பிரியாணி,வடை, பழவகைகள், ஜூஸ் ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மஹல்லாவாசிகள் மற்றும் பிற நண்பர்கள் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.