ஆதம் நகரை சேர்ந்தவர் அல்லாபிச்சை. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று இரவு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் சாலையில் தனது இல்லத்தை நோக்கி ஆட்டோவை ஓட்டிசென்றுள்ளார். ஆட்டோ டேட் கடை ( உணவகம் ) அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. நிலை தடுமாறிய ஆட்டோ ஓட்டுனர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ வாகனம் அருகில் உள்ள வாய்க்கால் பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோவை கையிற்றை கட்டி மேல கொண்டு வந்தனர். இதனால் இந்தபகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது. ஈசிஆர் சாலையோரத்தில் அனாதைகளாக மேயும் மாடுகளால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் புகைப்படங்கள் :
அப்துல் வாஹித்
செய்தி மற்றும் புகைப்படங்கள் :
அப்துல் வாஹித்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.