அனைத்து பள்ளிகளிலும் பல்வேறு மாணவ மாணவியர் 16 முதல் 18 வயதுடையோர் முறையான ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலையில் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வருவதால் பல்வேறு விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவ மாணவியர் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
அவ்வாறு மாணவ மாணவியர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் அவர்களின் வாகன சாவியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைக்கு பின்னர் வாகனத்தை நேரில் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் கடுமையாக்கப்பட்டால், ஒழுக்கம் வந்துவிடும். இறப்புகள் தவிர்க்கப்படும்.
ReplyDeleteதலைமை ஆசிரியர் பொறுப்பு என்பது ஒருவகையில் சரிதான்.
ReplyDeleteஅதே நேரம் போக்குவரத்துப் பிரிவு என்று காவல் துறையில் ஒரு பிரிவு இருக்கிறதே அது எதற்காக ?
ஓட்டுனர் உரிமம் பெறாதவர்களை தடுத்து நிறுத்தி தண்டனைக்கு ஆளாக்குவது அவர்களுக்குக் கடமை இல்லையா?
ஏற்கனவே மாணவர் ஆசிரியர் உறவுகள் சீர் கெட்டுக் கிடக்கின்றன. கண்டிப்புடன் நடக்கும் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி மிரட்டும் நிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள்.
ஆகவே காவல் துறையும் இதில் தீவிரமான பொறுப்பு எடுக்க வேண்டும்.