.

Pages

Thursday, July 31, 2014

திமுக தஞ்சை மாவட்ட பொறுப்பாளருடன் அதிரை பேரூராட்சி தலைவர் சந்திப்பு !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக தஞ்சை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய  பழனிமாணிக்கம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் து.செல்வம் புதிதாக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இன்று அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் சென்ற அதிரை நகர திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக மாவட்ட பொறுப்பாளர் து.செல்வத்தை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்ந்தனர். இதில் பட்டுகோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 19 வது வார்டு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். சந்திப்பின் போது பட்டுக்கோட்டை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை மற்றும் ஏனைய திமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


1 comment:

  1. தி மு க நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் மக்களிடம் பாஸ் மார்க் வாங்கவில்லை ......நாடாளுமன்ற தேர்தலிலும் முட்டை. எனக்கு ஞாபகம் வருவதெல்லாம் ..............
    'தமிழில் ஒரு பழமொழி 'கண்கெட்ட பின்னே சூரிய சம்ஸ்காரம் '

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.