.

Pages

Tuesday, July 15, 2014

அதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ![ படங்கள் இணைப்பு ]

இன்று [ 15-07-2014 ] மாலை 5 மணியளவில் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திவரும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா தலைமை வகிக்க, அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி, மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் கண்டன உரையாற்ற்றினார்கள்.

முன்னதாக நமதூர் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பேரணி புறப்பட்டு கடைதெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்த தமுமுக மமக நிர்வாகிகள் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் கண்டன கோசங்கள் எழுப்பினர். இதில் தமுமுக - மமகவின் முக்கிய நிர்வாகிகள் கோசங்கள் எழுப்ப கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வழிமொழிந்து கோசங்கள் எழுப்பினர். இதில் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் இசுரேல் ராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கூர் பட்டுக்கோட்டை முத்துபேட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தமுமுக மமக நிர்வாகிகள் உட்பட அதிரை நகர தமுமுக - மமகவினர் ஆகியரோடு பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.










2 comments:

  1. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகிய கதை இதுதான் மாநில பொதுச்செயலாளர் கலந்துக்கொள்ளும் ஆர்பாட்டத்தில் 20 நபர்கள் கலந்துக்கொண்டால் அடுத்த முறை உங்களுக்கு 1 எம் எல் ஏ சீட்டு பெருவது கடினம்

    ReplyDelete
  2. பெயருக்காக கண்டன ஆர்பாட்டம் நடத்தக்கூடாது , இஸ்ரேல் தூதரக முன்பாக நடத்திருந்தால் சரி எனலாம்

    அதிரையில் நடத்துவது செவிடன் காதில் சங்கு ஊதியது போலதான். இனி பேனரில் இங்கிலீஷ் வார்த்தை அடங்கியதாக இருந்தால் டெல்லி வாசிகள் படிக்க ஏதுவாக இருக்கும்!

    இஸ்ரேல் அட்டகாசத்தை ஒடுக்க ஈரானால் மட்டும் தான் முடியும் - காலம் எப்போ வருமோ!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.