அய்டா தலைவர் ராஃபியா அவர்கள் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அய்டா முன்னாள் நிர்வாகி அஜ்வா நெய்னா மற்றும் பசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை தலைவர் சர்புதீன் மற்றும் மெப்கோ நிர்வாகி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக துணை தலைவர் ஜபருல்லா வரவேற்புரையாற்றி நோன்பு பெருநாள் சிறப்பு குறித்து விளக்கி கூறினார்.
தமாம், அப்ஹா, மதீனா ஆகிய பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கிராத் ஓதிய சிறுவர் சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இறுதியில் அய்டா நிர்வாகி அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
செய்தி தொகுப்பு :
அஜ்வா நெய்னா ( அய்டா முன்னாள் நிர்வாகி )
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஈத் முபாரக்
இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com