.

Pages

Sunday, July 27, 2014

முத்துப்பேட்டையில் பரபரப்பு ! பட்ட பகலில் பெண் தீ குளித்து சாவு !!

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண்ணும் தீயில் கருகி இறந்து போனார். உடன் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் சென்று விசாரனை நடத்தினார்கள். இதில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் என்பவரது மனைவி சரோஜா(65) என்று தெரியவந்தது. மேலும் சரோஜா சில வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு கோவில், தர்ஹா போன்றவைகளுக்கு சென்றும் குணம் ஆகாமல் வீட்டில் இருந்த அவர் நேற்று பகல் மண்ணனை கேன் மற்றும் தீ பெட்டியை எடுத்து சென்றும் கந்தப்பரிச்சான் ஆற்று திடலில் நின்று தீ வைத்து கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. இது குறித்து சரோஜாவின் உறவினர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் செய்தி:
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்று கரையில் எரிந்த நிலையில் காணப்படும் சரோஜாவின் உடல்.

செய்தி மற்றும் படங்கள் : 
முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.