.

Pages

Thursday, July 17, 2014

இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !

அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் சரபுதீன். தனது குடும்ப வருமானத்திற்காக டீ கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ) இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக சென்னை முகப்பேருவில் உள்ள இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனையில் இருதயத்தின் வால்வுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதை மருத்துவரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோளாறை 20 நாட்களுக்குள் உடனடி அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துகொள்ள வேண்டும் என மருத்துவரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூபாய் 3.50 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.

ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது என்பதால். தன்னார்வு தொண்டு நிறுவனமொன்று இந்த தொகையின் பகுதியை அதாவது ரூபாய் 2 லட்சத்தை செலுத்த முன்வந்துள்ளது. மீதி 1.50 லட்சம் தொகை அறுவை சிகிச்சைக்கு தேவைபடுவதால் இச்சகோதரி நம்முடைய உதவியை அன்புடன் நாடியுள்ளார்.

நோன்பு பெருநாளைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தயாராக இருக்கிறார். புனித ரமலான் மாதத்தில் உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரியின் இருதய சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.

குறிப்பு : இவரின் குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தொளலத் பேகம் அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூரில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி பாதிப்படைந்த குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : NABEENA BEGAM
Bank Name : STATE BANK OF INDIA 
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 31940528973

தொடர்புக்கு : 0091 7402499071 ( சரபுதீன்- நோயாளியின் கணவர் )

பரிந்துரை : வழக்கறிஞர் அப்துல் முனாப் 

பார்வைக்காக மருத்துவ ஆவணங்கள் :






2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.

    சகோதரியின் மருத்துவ காப்பீடு என்னாச்சு இல்லையா.
    இன்ஷா அல்லாஹ் சகோதரிக்காக துவா பரகத்தும். இன்ஷா அல்லாஹ் உதவி செய்வோம்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் .

    பெங்களூர் நாராயண hyrudhalaiya ஆஸ்பத்திரியில். இலவச ட்ரீட்மெண்ட் உண்டு . அங்கை பொய் முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.