அதிரை முத்தம்மாள் தெரு நுழைவாயிலை ஒட்டி அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் தமிழன் டிவி செய்தியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டாயுதபாணி இவரது மகன் ரமேஷ் ( வயது 32 ) தமிழன் டிவியின் செய்தியாளராக பணிபுரிகிறார். இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்றபோது முத்துப்பேட்டை தர்ஹாவிலிருந்து கேரளாவை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது.
பேருந்து அதிரை முத்தம்மாள் தெரு நுழைவாயிலின் அருகே வந்த போது ரமேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ரமேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.