.

Pages

Friday, July 18, 2014

மல்லிபட்டினத்தில் விஷ வாயு தாக்கி தந்தை - மகன் பரிதாப பலி [ படங்கள் இணைப்பு ]

மல்லிபட்டினம் சரபேந்திரராஜன்பட்டினம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
           
சரபேந்திரராஜன்பட்டினம் கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமான ராமர்கோவில் தெருவில் உள்ள கிராம சுகாதார வளாகத்தின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வரும் தங்கவேலு (55), இரண்டாம்புளிக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வரும் தனது மகன் குமார் என்ற மணிகண்டன் (27), தங்கவேலுவின் அண்ணன் மருமகன் முத்துப்பேட்டையை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தை சேர்ந்த குள்ளவண்டு என்ற சுரேஷ் (28) ஆகியோருடன் கழிவு நீர் தொட்டியின் மூடியை 17 ஜூலை வியாழன் அன்று இரவு 7;30 வாக்கில் திறந்துள்ளனர்.

மூடியை திறந்ததும் திடீரென விஷவாயு தாக்கியதில் குள்ளவண்டு என்ற சுரேஷ் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற தங்கவேலு தனது மகன் குமார் என்ற மணிகண்டனுடன் தொட்டிக்குள் இறங்கி, சுரேஷை காப்பாற்றி தரைப்பகுதிக்கு ஏற்றி விட்டநிலையில், இருவரும் விஷவாயு தாக்கி கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்கம்பக்கத்தினர் உயிர்பிழைத்த சுரேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், நிலைய அலுவலர் விக்கிரமன் தலைமையில் தங்கமணி, நீலகண்டன், அப்பாதுரை உள்ளிட்ட வீரர்கள் தீயணைப்பு துறையின் நவீன கருவி மூலம் தங்கள் உயிரை பணயம் வைத்து, கழிவு நீர்த்தொட்டிக்குள் இறங்கி சடலமாக கிடந்த தந்தை தங்கவேலு மகன் குமார் என்ற மணிகண்டன் இருவரையும் மீட்டனர்.

குமார் என்ற  மணிகண்டன் மனைவி நீலாவதி அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சடலங்களை உடற்கூறாய்விற்கு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தது இப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி & படங்கள்: 
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.