நிகழ்ச்சிக்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் தலைமையேற்று, நிகழ்சிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னிலை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'இஸ்லாமியப் பொருளாதாரம்' மற்றும் வட்டியின் கொடுமை குறித்து அழகாக விளக்கி கூறினார்.
கடந்த அன்று [ 08-06-2014 ] அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவர் A. அப்துல் ரஹீம், துணைத் தலைவர் S. அஹமது அஸ்லம், செயலாளர் A. சேக் அலி, துணைச் செயலாளர் M.U. கமாலுதீன், பொருளாளர் S.H. அப்துல் காதர் ஆகியோர் இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் A. அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்
கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் அலி அக்பர், ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் ஒத்துழைப்புடன் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதிரையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எனது அன்பிற்குரிய காக்கா இப்ராஹிம் அன்சாரி அவர்கள் ஒரு சிறந்த சமூக விளிப்புனர்வுவாதி அவர்களின் இந்த பங்கேற்ப்பு தாள சிறந்தது. கர்ழன் ஹஸனா இதில் பயனடையும் பயனாளிகள் வாங்கும் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தினால் அந்த அமைப்பு மேலும் வலுப்பெறும் ....
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் ...அதிரையர்களின் தர்ம சிந்தனை உலகெங்கும் பரவட்டும் ....
'கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை'
என்ற தமிழ் மொழிக்கு முற்றுபுள்ளி வைப்போம் ..வாங்கிய கடன்களை உரிய காலத்தில் கொடுக்க முற்படுவோம் ...ஆமீன் .