.

Pages

Saturday, July 19, 2014

துபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் நைஜீரிய இளைஞர் சாதனை !

துபாயில் ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 18வது ஆண்டாக கடந்த ஜூன் மாதம் 29 முதல் நடைபெற்றது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, ,கத்தார், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 87 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த சில வாரங்களாக் தினமும் இரவில் நடைபெற்ற வந்து போட்டிகளின் முடிவுகள் நேற்று இரவு அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சுலைமான் அப்துல் கரீம் ஈஷா முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இரண்டாம் இடத்தை சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த ஒமர் ஹுசைன் பெய்ஷா, 200,000 திர்ஹம் பரிசையும், ஏமன் நாட்டை சேர்ந்த முஹம்மது காலித் யாசின் மூன்றாம் பரிசாக 150,000 திர்ஹம் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

முதல் பரிசு பெற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த சுலைமான் அப்துல் கரீம் ஈஷா


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.