.

Pages

Saturday, July 26, 2014

அதிரை சகோதரியின் நன்றி அறிவிப்பு !

நமதூர் புதுத்தெருவில் வசிக்கும் சரபுதீன் அவர்களின் மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ). இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு கடந்த [ 17-07-2014 ] அன்று உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

செய்தியை காண்க :
'இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !

செய்தியை வாசித்த நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் இன்று [ 26-07-2014 ] காலை நிலவரப்படி,
ஜித்தாவில் வசிக்கும் சகோதரர்கள் தாஹா ஷஃரிப் மற்றும் சுபீர் அஹமது ஆகியோர் மூலமாக ரூபாய் 18,000/-
மேலத்தெரு M. அஹமது லியாவுதீன் 10,000/-
புதுமனைதெரு ஹாஜி ஜமால் 5000/-
கீழத்தெரு குலாம் முஹம்மது 1500/-
மேலத்தெரு சாதிக் 1000/-

ஆகியோர் வங்கி கணக்கின் மூலமாகவும், நேரடியாகவும் தனித்தனியாக வழங்கிய ரூபாய் 35,500/- ரை இந்த குடும்பத்தினர் பெற்றுள்ளனர்.

தமது  சிகிச்சைக்காக நிதிஉதவி வழங்கிய சகோதரர்களுக்கு நன்றியையும் துவாவையும் கூறிக்கொள்வதாக அந்த ஏழை சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் பெருநாள் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள தயாராக இருக்கும் இந்த சகோதரிக்கு தேவைப்படும் மீதமுள்ள தொகையை அனுப்பி உதவ மீண்டும் நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.