.

Pages

Monday, July 21, 2014

அதிரையை பரபரப்பாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள் !?

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:11,12)

இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பரம்பரை முஸ்லிம்கள‌ல்லர். பல்வேறு கால கட்டங்களில் பற்பல கரணங்களால் இஸ்லாத்தை ஏற்றவர்களின் வழி வந்தவர்களே.

அப்போது நமக்குப் புரியாத மொழியில் அரபிய மொழியில் இருந்த ஹதீஸ்கள் நாளடைவில் தமிழாக்கம் செய்யப்பட்டு நம் மக்களிடம் இதுதான் உண்மையான வழிபாடு என நம் முன்னோர்கள் காட்டித் தந்த வழியில் பல நூறு ஆண்டுகள்  நாமும் நம் முன்னோர்களும் வாழ்ந்து வந்த வேளையில் சுமார் இருபத்தைந்து முதல் முப்பது ஆண்டுகள் முன்பு வரை குழப்பமின்றி வாழ்ந்த நாம் தவ்ஹீத் என்ற சொல்லும், அதன்பால் வரும் ஹதீஸ், குழப்பங்களும். தொடர்கதையாகி ஆனால் இன்றும் அதற்கு முறையான தீர்வுகள் வந்தபாடில்லை. மாறாக ஒன்று இரண்டாகி, இரண்டு பத்தாகி மக்களை பித்துப்பிடிக்க வைத்துள்ளதுதான் மிச்சம்.

இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கையும், சமாதானமும் சகோதரத்துவமும்தான் ஆனால் அதனை குழிதோண்டிப் புதைக்கக்கூடிய வகையில் நம் சகோதரர்களுக்கிடையே பிளவுகள், சவால்கள், விவாதங்கள் மற்றும் குழப்பங்கள்.

குழப்பம் மற்றும் சமாதானம், நாசம் மற்றும் சீர்த்திருத்தம், தீயது மற்றும் நல்லது, ஹராம் மற்றும் ஹலால் போன்றவற்றை பிரித்தறிவிக்கும் பொறுப்பை முழுமையாக தனது கையில் வைத்துள்ளது குர்ஆனும் ஹதீஸும்.  அதில் மனித புத்திக்கு இடம் கிடையாது. இதன் மூலம் இஸ்லாத்தில் குறித்த பிரச்சனைக்கான வாயில் முழுமையாக மூடப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

குர்ஆனையும், ஹதீஸ்களையும் ஆதாரங்களாக்கி பின்பற்றி வருபவர்களை வீணில் குழப்பும் வேலைகளைத்தான் ஒரு சிலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு இணையான எதையும் வழிபட அனுமதி இல்லை. அதுதான் இஸ்லாம் கற்றுத் தந்த பாடம். இது யாவரும் அறிந்ததே ! ஆனால் 'ஷிர்க்' ( இணை வைத்தலை ) கடுமையாக எதிர்க்கும் சிலர் அதன் சித்தாந்தத்தை மறந்து, தமக்குள் யார் சிறந்தவர் ? என்ற தமக்குள்ளேயே இணை கற்பிக்கும் கேவலம், இவர்களுக்குள்ளே ஏற்பட்டுள்ள ஈகோ மக்களிடையே இவர்கள் மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்லாம் கடுமையாக மறுத்துள்ள, இணை வைத்தல், தனிமனித வழிபாடு, வரதட்சணை எதிர்ப்பு இன்னும் பல. எல்லாவற்றிலும் ஒத்துப்போகின்ற, அமைதியை நாடும் மக்களிடம், புதிதாக ஏதேனும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறேன் பேர்வழி என்று அறைகூவல், சவால் என்று மக்களை குழப்பும் வழக்கத்தைத் தவிர இவர்கள் சாதித்தது என்ன ?

குர்ஆன், ஹதீஸ்களில் அணுவளவும் ஆதாரமில்லாத நிலையில் தங்களின் இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் சுயமாகப் பெயரிட்டுக் கொண்டு அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதுதான் இவர்கள் சாதித்தது.

தங்களை மட்டுமே சிறந்தவர்கள் எனப் பீற்றுவோர், இறைக் கட்டளைகளை நிராகரித்து இவ்வுலகிலேயே தங்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் எனத் தீர்ப்பளிப்பதோடு, மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை, காஃபிர்கள், முஷ்ரிக்கள் என்றெல்லாம் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்திவைத்திருக்கும் நிலையில் அல்லாஹ்வின் அந்தத் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வுலகிலேயே தீர்ப்பளிப்பவர்கள்

ஷிர்க்குகளில் மிகக் கொடிய ´ஷிர்க்கை செய்பவர்கள் தங்களைத் தாங்களே சிறந்தவர்கள் எனப் பீற்றுவோரே !

குழப்ப வாதிகள் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை; அவர்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்களே, அதிலும் அவர்கள் தாம் சீர்திருத்த வாதிகள் என நம்பிக்கொண்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.

இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் உலகே காசா ( பாலஸ்தீனம் ) மக்களுக்காக இந்தப் புனித மாதத்தில் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டு இருக்க, அதிரையில் மட்டும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கிடையே நடைபெறும் வார்த்தைப் போர் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இஸ்லாம் அல்லாதோர் கூட பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்க இதில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நீயா ? நானா ? எனும் போட்டி அநியாயத்திற்குப் பல்லிளிக்கிறது.

இந்த சங்கைமிகு மாதத்தில் இறுதிப் பத்தில் இருக்கும் நாம், நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து உலகில் நம் சமுதாயம் எதிர் கொண்டிருக்கும் பேராபத்திலிருந்து விடுதலை பெற பிரார்த்திப்பதே ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் இதுதான் அமைதியை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பும்.

20 comments:

  1. //தாம் சீர்திருத்த வாதிகள் என நம்பிக்கொண்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.//

    என்னபோதிக்கப்பட்டதோ அதுதான் செயலிலும் வரும்.அதற்கு பெயர் சீர்திருத்தம் என்றால் .....!
    இன்னும் சீர்திருத்தம் என்றால் என்ன என்பதை இன்னமும் விளங்கவில்லை என்பதை தெளிவாகவே காட்டுகிறது.

    ReplyDelete
  2. அதிரையில் சமுதாய குழப்ப வாதிகள் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் நான் தான் பெரியவன் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் பெருமை அடிப்பவன் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் கண் மூக்கு தெரியாமல் நடப்பவன் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் எல்லாம் (போலி)தெரிந்தவன் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் உண்டு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் இன்று எல்லாம் இருக்கு.‎
    ஆனால் மழை இல்லை.‎

    அதிரையில் மழை இருந்தது.‎
    மேலே சொல்லப்பட்டவர்கள் இல்லை.‎

    ReplyDelete
  3. உண்மையான தவ்ஹீத்வாதிகள் !?

    “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:11,12)

    தான் குழப்பம் உண்டாக்குகின்றோம் என்பதை உணராத குழப்பவாதிகள்.
    பித்அத் பித்அத் என்று பித்துப் பிடித்துவிட்டதோ. பேஸ் புக் கில் பித்து பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  4. உண்மையான தவ்ஹீத்வாதிகள் !?

    குர்ஆன், ஹதீஸ்களில் அணுவளவும் ஆதாரமில்லாத நிலையில் தங்களின் இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் சுயமாகப் பெயரிட்டுக் கொண்டு அவற்றிற்கு வக்காலத்து வாங்குவதுதான் இவர்கள் சாதித்தது.

    தங்களை மட்டுமே சிறந்தவர்கள் எனப் பீற்றுவோர், இறைக் கட்டளைகளை நிராகரித்து இவ்வுலகிலேயே தங்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் எனத் தீர்ப்பளிப்பதோடு, மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை, காஃபிர்கள், முஷ்ரிக்கள் என்றெல்லாம் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்திவைத்திருக்கும் நிலையில் அல்லாஹ்வின் அந்தத் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வுலகிலேயே தீர்ப்பளிப்பவர்கள்

    ReplyDelete
  5. பலருடைய சொல்ல முடியாத வேதனைகளை வார்த்தைகளாக வடித்து இருக்கிறீர்கள்.

    அதிரைக்கென்று பல சிறப்புக்கள் உள்ளன. இப்போது அந்த சிறப்புக்கள் யாவையும் சீரழித்து வருபவை இயக்கங்களுக்கிடையே நடைபெறும் வார்த்தைப் போர்கள்.

    மற்றவர்கள் முன்னாள் சமுதாயத்துக்கு தலைக் குனிவை ஏற்படுத்துவதை இவர்கள் இன்னும் உணரவில்லை.
    சொந்த சகோதரனின் மாமிசத்தை உண்ணும் நிலை என்று எச்சரிக்கை விடுக்கபட்டிருப்பதையும் உணரவில்லை.

    நீயா? நானா? என்ற மன நோயின் விளைவின் காரணமாக சமுதாயத்தை நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் குற்றால அருவி போல கொட்டுகிறது. இதனால் இணைய தளம் நாறுகிறது.

    தொடர்புடைய அனைவருக்கும் அல்லாஹ் நல்ல புத்தியைக் கொடுப்பானாக!

    ReplyDelete
  6. போஸ்ட்டர், அறிவிப்பு தட்டி, ஒலிபெருக்கி, சமூக வலைதளங்கள் மூலம் சவால் - அறைகூவல் - விவாதம் - தனிநபர் விமர்சனம் - வாட்ச் அப் பிரசாரம் இவைகள் மூலம் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே.

    சமுதாயம் நலன் பெற எத்தனையோ சிறந்த விசயங்கள் நம்மிடம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தலாமே அதை விடுத்து இதுபோன்ற பிறர் முகம் சுளிக்கும் செயல்களை தொடர வேண்டாம் நண்பர்களே.

    ReplyDelete
  7. நுனிப்புல் மேய்ந்த ஆய்வு!

    குற்றமும் குற்றவாளிகளும் முறையாக அடையாளப்படுத்தப்படாமல் ஏதோ ஏட்டிக்குப் போட்டியான அமைப்புகள் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ஃபலஸ்தீன சகோதரர்களுக்காக குறைந்தபட்சம் நாம் இறைவனிடம் முறையிட வேண்டும் என்பதை இயக்க அடிப்படையில் தான் செய்ய வேண்டுமா? இந்த ரமலானில் ADT அங்கத்தினர்கள் சுயமாக செய்திருக்க மாட்டார்கள் என எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள் மேலும் ஃபலஸ்தீன பிரச்சனையில் மட்டும் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?!

    மிக சமீபத்தில் ADT மீது திணிக்கப்பட்ட விடயங்களில் மட்டுமே பதில் நிகழ்வுகள் அமைந்திருந்தன என்பதை நடுநிலையான, சிந்திக்கின்ற அதிரையர் அனைவரும் அறிந்த ஓன்றே!

    ADT என்றுமே தாங்கள் தான் உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று வாதிட்டதில்லை ஆனால் யாரென்று தீர்மானிக்க அல்லாஹ் போதுமானாவன்.

    ஓரு தனி மனிதனின் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக தமிழக அளவில் ஒரு பெருங்கூட்டமே ஆதாரப்பூர்மான ஹதீஸ்களை மறுக்கும் வழிகேட்டுக் கொள்கையில் இறங்கியிருப்பதை தடுக்கும் கடமை உங்களுக்கு இல்லை? அட்லீஸ்ட் ADT செய்யும் போதாவது மௌனமாக ஆதரவு தரலாமே!

    ADT ஒரு அமைப்பல்ல மாறாக அது குர்ஆன் ஹதீஸை மட்டும் தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களின் நமதூருக்கான (அமைப்பு எனும் தோற்றத்தில் அமைந்த) சங்கமம் அன்றி வேறில்லை. ஏனெனில் இங்கே,

    தக்லீது கிடையாது அதனால் எங்களுக்கே உறுப்பினர்கள் அதிகம் என்ற தம்பட்டம் கிடையாது

    கட்சி நிலை கிடையாது அதனால் கொடியும் கிடையாது

    தலைவனின் சொல்லுக்கு அப்பீல் கிடையாது என்ற நிலையும் இல்லை

    சொல்வதும் செயல்படுத்தப்படுவதும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே.

    இயக்க உறுப்பினர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என மதமதப்பில் திரிவதும் கிடையாது.

    யரோடும் நீயா? நானா? போட்டியில் இறங்குவதும் கிடையாது.

    யாரிடமும் வீண் வம்புக்கும் போவதும் கிடையாது ஆனால் பல் பிடித்து பார்ப்பவர்களை விடுவதும் கிடையாது.

    ADTயில் எந்த அமைப்பினர்களும் குர்ஆன் ஹதீஸை (அதிரையர்கள்) தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டால் உறுப்பினர்கள் ஆகலாம் ஆனால் எந்த அமைப்பின் நிர்வாகிகளும் இங்கே ADT நிர்வாகத்திற்குள் வர முடியாது.

    எனவே, ADTயை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டாம் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன், மீண்டும் தேவையெனில் வருவேன் ஆனால் இயக்கவாதிகளின் சவடால்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். வஸ்ஸலாம்.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பு:
      இது எங்கள் தரப்பு விளக்கமே மற்றவர்கள் உங்கள் விமர்சனத்து உரியவர்களா என்பதை அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் உற்று நோக்கி வரும் நடுநிலை அதிரையர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

      Delete
  8. ஒருவரை ஒருவர் சாடு வதற்காகவே அதிகம் இணையம் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் ஆச்சரியம், எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது என்பதுதான். நேரங்கள் விரயம், வீண் வார்த்தைகளால் பாவங்கள் சம்பாதிக்கப்படுகிறது..

    ReplyDelete
  9. நாளை 23/07/14 காலை சென்னையில் இருந்து அதிரை செல்ல வாகனம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் கண்டிசன் 2 மேற்பட்டவர்களா நலம் தொடபுக்கு 9790282456/0544963505

    ReplyDelete
  10. ஒரு குழுவினர் மட்டும் தங்களை தவ்ஹீத் வாதிகள் என்று அழைத்துக் கொள்வதே தவறு. ஒரு சில பெண்கள் மட்டும் சேர்ந்து 'பத்தினிகள் சங்கம்' என்று வைத்துக் கொண்டு சங்கத்தில் இல்லாத பெண்களை விமர்சிப்பது போன்றது.

    ReplyDelete
  11. குரான் ஹதீஸ் இதற்க்கு முன்னால் யாரும் இங்கு பின்பற்றவில்லை போலும். இவர்கள் வந்துதான் பின்பர்ருகிரார்கலாம்.தாங்கள் தான் உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று வாதிட்டதில்லை என்ற உண்மையையும் கூறிவிட்டார்கள். நமக்கேன் வம்பு வேண்டாம் வேண்டவே வேண்டாம். விளக்கங்களுக்கு நன்றிதான்.

    ReplyDelete
  12. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஸஹர் ரமழான் முபாரக்.‎

    VERY GOOD.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  13. கடந்த காலங்களில் அதிரையில் மட்டுமல்ல தமிழகம் முழுதும் த த ஜ தோழர்களின் செயல்பாடுகளையும் எ டி டி யின் செயல்பாடுகளையும் அவதானித்த யாரும் சகோ. அமீன் அவர்கள் சொல்வதை மறுக்க இயலாது.

    வார்த்தைகளால் மற்ற முஸ்லிம்களை காய்ப்படுத்துவதர்கேன்றே பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் போல் ததஜ தோழர்கள் நடந்து கொள்வார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர்களிடம் இருந்து ஒதுங்கி சித்தம் போக்கு என்று இருந்துவிடுவதே நல்லது.

    அனைவருக்கும் இறைவன் அமைதியைக் கொடுப்பானாக! சும்மா கிடந்த சங்கை ஊதிய அவர்களுக்கும்தான்.

    ReplyDelete
  14. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதே நோக்கமாக கொண்டவர்கள் ADT யை கேடையமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்

    ReplyDelete
  15. மனிதன் தவறு செய்யக்கூடியவனே நூறு சதவீதம் அனைத்து விசயங்களிலும் சரியாக நடப்பவர்கள் யாரும் இருக்க முடியாது.

    அப்படியிருக்க யாரானாலும் ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் அதை திருத்திக் கொள்வதே மேலான செயலாகும். இதில் போட்டி பொறாமைக்கும் காழ்ப்புணர்வு அடைவதற்கும் அவசியமில்லை. இப்படி நடந்து கொள்ளுதல் அவரவர் சுயநலத்தைக் காட்டுகிறது.

    புனித ரமலான் மாதம் கருதி இத்தகைய பிரச்சனைகளை தவிர்த்துக் கொண்டு விபாதத்துக்களில் ஈடுபடுவது மேன்மையாகும்.

    அல்லாஹ் நம் அனைவர்களின் பாவத்தையும் மன்னிப்பனாகவும்.

    ReplyDelete
  16. அதிரையர்களின் இப்தார் நிகழ்ச்சிகளை நமதூர் பள்ளிவாசல்களில் சிறப்பாக செய்துவருவது சந்தோசமான விசயமே இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அமைப்புகள் அவற்றை எடுத்து நடத்துவது அந்த அமைப்புகளின் விளம்பர நோக்கம் என்றே கூறவேண்டி உள்ளது .ஊரில் அமைப்புகள் அதிகம் ஆவதால் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்படுகின்றன.

    குறிப்பாக ஜக்காத் ,பித்ரா போன்ற கடமை ஆக்கப்பட்ட வழிபாடுகளிலும் கூட சமீப காலங்களில் கருத்து வேற்றுமை உண்டாகி இருப்பது இதற்கு ஒரு எடுத்துகாட்டு .

    இப்படி நாடு தழுவிய மாநிலம் தழுவிய அமைப்புகளிலும் தெருவிற்கு தெரு ஏற்பட்டிருக்கும் சமீபத்திய அனைத்து அமைப்புகளும் களையப்படவேண்டும் அல்லது அமைப்புகளால் அது வேறுபட்டாலும் ஊர் ஒற்றுமை அதன் வளர்ச்சி போன்றவற்றில் கருத்து ஒற்றுமை நம்மிடம் அவசியம் தேவை அமைப்புக்கள் ஒற்று மொத்த ஊருக்கு உதவவேண்டும் மாறாக அவர் அவர்களின் தெருக்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் செய்துகொள்ளும் உதவிகள் அவற்றை பொது சேவை என்று கூற முடியாது.பொது நலன் செய்யவிரும்பும் ஊர் முக்கியஸ்தர்களும் விளம்பர பிரியர்கலாகளாக ஆகிவரும் நிலையம் நம்மிடம் மாறவேண்டும்.

    குறிப்பாக நல்லவற்றை செய்ய ஒரு அமைப்பு முன்வரும்போது அவற்றை அனைவரும் ஆதரிக்கவேண்டும் ஆனால் நமதூரில் இவைகள் விமாசிக்க படுகின்றன அல்லது தடுத்த நிறுத்தபடுகின்றன இந்த அவலமும் களையப்படவேண்டும் .

    இவற்றில் நம்மிடம் கருத்து ஒற்றுமை இல்லையெனில் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் ஆனால் நம்மிடம் ஏற்பட்டுள்ள இந்த பிரிவுகளால் நம்மில் பத்து பேரைவைத்து ஒரு நாளைக்கு பத்து ஷோ ஓட்டும் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்தான் .

    அல்லாஹ் நம்மவர்களை கருத்து ஒற்றுமை உடைய மக்களாக ஆக்கி அருள அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .

    ReplyDelete
  17. மார்க்கம், தர்க்கம் இவை எத்துனை முறை பதிவிட்டாலும் அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்க இயலாது. இதை பலர் பலவாறு கூவிவிட்டனர்.

    இதனால் பல நடுநிலையாளர்களின் நேரமும், எனர்ஜியும் வேஸ்ட் ஆனதுதான் அதிகம். எனவே இவற்றை சரி செய்ய அல்லாஹ்வால் மட்டுமே முடியும்.

    எனினும் ரமளானிலாவது இதுபோன்ற தர்க்கங்களை தவிர்க்கலாம்.

    ஏதோ சொல்வார்களே, 'தூங்குபவரை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது' அது இவர்களுக்குப் பொறுந்தும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.