ஆர்வமுடன் சமைத்துக்கொடுத்த அஹமது ஜுபைர் அவர்களின் மந்தி பிரியாணியை கலந்துகொண்ட அனைவரும் சஹனில் ஒன்றாக அமர்ந்து ருசித்து சாப்பிட்டனர். அதிரையின் அனைத்து பகுதிலிருந்து வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்து கொண்டனர்.
Wednesday, July 30, 2014
செக்கடிமேடு நண்பர்களின் பெருநாள் மந்தி விருந்து [ படங்கள் இணைப்பு ]
ஆர்வமுடன் சமைத்துக்கொடுத்த அஹமது ஜுபைர் அவர்களின் மந்தி பிரியாணியை கலந்துகொண்ட அனைவரும் சஹனில் ஒன்றாக அமர்ந்து ருசித்து சாப்பிட்டனர். அதிரையின் அனைத்து பகுதிலிருந்து வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்து கொண்டனர்.
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பந்தி எப்போ மந்தியானது ........நோன்பு பெருநாளும் வந்துச்சு உலகமெங்கும் அதிரையர்களின் கொண்டாட்டங்கள் போதும் போதும் என்றாகிவிட்டது .........சாப்பாட்டில் உள்ள ஒற்றுமை நம்மில் அனைத்து விசயங்களிலும் வரவேண்டும் ....அனைவர்க்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் ...ஆமீன் .
ReplyDeleteமந்தி சாப்பாடு. இது தேவையா? இது ரொம்ப முக்கியம், ஊரில் ஆகவேண்டியது எவ்வளவோ இருக்குது, எங்கு பார்த்தாலும் குப்பைகளும் கூழங்களும், கடுமையான துர்ர் நாற்றம், சாலையில் நடக்க முடியலையாம். சுகாதாரம் கிடையாது, ஒற்றுமை கிடையாது, தேவை இல்லாத வேலை இது. ஏற்கனவே கொழுப்பு ஏறிக்கிடக்குது மாதாமாதம் தஞ்சாவூரு டாக்டருக்கு ரொக்க ரொக்கமா பணம்வேறு. இப்படி ஆட்டுக்கறியையும் கோழிக் கறியையும் வாயில் அதக்கி அதக்கி சாப்பிட்டால் எப்படி ஜீரணிக்கும்.
ReplyDeleteஉடம்பில் உள்ள கொழுப்பு கரைய பன்னாமீனு சூப்பு வைத்து ஆறவைத்து அதில் கெழக்க மீனின் எண்ணையை ஊற்றி நன்றாக கலக்கி குடிக்க எல்லாம் சரியாகி விடும்.
அல்லது நாளைக்கி மந்தி சாப்பிட்ட எல்லோரும் ஊரில் உள்ள குப்பை கூழங்களை குனிந்து நிமிர்ந்து அல்ல எல்லா கொழுப்புகளும் அப்படியே உருகி ஊத்தும்.
ஒற்றுமையை பாருங்கையா, என்ன அழகு. அப்படியே வடியுது.
பெப்சி, கோக்குகளில் காசா குழந்தைகளின் குருதி கலந்துள்ளதாகவும் அதனை புறக்கணிக்க வேண்டும் என்று மானமுள்ள முஸ்லிம்கள், மனிதாபிமானம் உள்ள பொதுமக்கள் போராடி, குரல் கொடுத்து வரும் நிலையில் பெப்சியை குடித்து அதனை பகிரங்கப்படுத்தி செய்தியாக வெளியிடும் அதிரை முஸ்லிம்களின் பொறுப்பற்றத் தனத்திற்கு எனது கண்டனங்கள்.
ReplyDeleteமானமுள்ள முஸ்லிம்கள், மனிதாபிமானம் உள்ள பொதுமக்கள் போராடி, குரல் கொடுத்து வரும் நிலையில் பெப்சியை குடித்து அதனை பகிரங்கப்படுத்தி செய்தியாக வெளியிடும் அதிரை முஸ்லிம்களின் பொறுப்பற்றத் தனத்திற்கு எனது கண்டனங்கள்.
ReplyDeletePanthiyila Utkanthu Manthi Sappittavangale itharkku ungaloda bathil iruntha sollungalen. thayavu seithu adirai news ithu pondra avasiyamatra pathivuhalai pathiya vendam.
பிஸ்மில்லா. . .
ReplyDeleteإِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். 18:107
அதிரை போட்டோக்களை பொறுத்தவரை ஒரே தின்கிற சமாசாரமாதான் இருக்குது!!! மந்தி விருந்து, இட்லிக்கு பட்டுக்கோட்டை க்கு படையெடுப்பு, பிரியாணி விருந்துகள், இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்!!!! பெருநாளை முன்னிட்டு ஒரே ஒரு சமுதாய பணிகள், ஏழைகளுக்கு உதவிகள் உண்டா??? TNTJ தவிர, ஊரின் முக்கிய தலைவர் தன் கையாலையே மந்தி விருந்தை பாவம் ஊரில் உள்ள ஏழைகளுக்கு!!!!!!!!! பரிமாறுகிறார், அவருக்கு மறுமையில் பெரிய நன்மை கிடைக்கும் என்று!!!! நினைகிறேன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும், நம்மூரில் பெருநாள் முடிந்த அடுத்தநாள் இதுபோன்ற விருந்து செய்வது ஒரு வகையான சந்தோசக்கொண்டாட்டம். வயது, ஏழை வித்தியாசம் இன்றி முடிந்தவர்கள் செலவை ஏற்றுக்கொண்டு சந்தோஷத்துக்காக செய்வது. ஆனால் எவ்வலவோ எத்தி வைத்தும் இப்போது ஒரு சில அதிரை மக்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பாலஸ்த்தீனைப் பற்றிக்கவலைப்படாமல் இது போன்ற காறியத்தை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்கள் இந்த வருடமாவது தவிர்த்திருக்க வேண்டும்.
ReplyDeleteநான் கேள்விப்பட்ட வகையில் ஒரு சில மனச்சாட்சி உள்ள நண்பர்கள் பாலஸ்தீன சொந்தங்களுக்காக இவ்விருந்தை புறக்கனித்தனர் அவர்களுக்கு என் சல்யூட். அல்லாஹ் நம் துஃவாக்கள் மூலமாக அச்சொந்தங்களை பாதுகாப்பான். அன்ஷா அல்லாஹ் இனிவரும் காலம், நேரங்களில் இதற்க்காவே (மந்தி கஃப்சா விருந்துக்காக) ஊரில் உயிர்வாழும் சகோதர்கள் கொஞ்சம் தலை, கால், உடல் தனித்தனியாக அருந்து விழுகிறதே ஒன்னுமே அறியா நம் பாலஸ்தீன் பின்ஜுக் பாதகன்கள் அந்த்ப் பச்சிளம் குழந்தைகளுக்காக கவலைக்கொண்டு துஃவாக்கேளுங்கள், அங்குள்ள மக்கள் உடல் உருப்பு இழந்து, சொந்தங்களை இழந்து, வாழ்வை இழந்து நிர்க்கதியாக நம் இஸ்லாத்தை எஹூதிகளிடம் மிருந்து மீட்க்க போராட்டத்தில நாமும் கலந்துக்கொள்வோம். இதனை தவிர்த்து அவர்களுக்கு அல்லாஹ்விடம் மன்டியிடுவதன் மூலம்.
நம் வீட்டில் ஒரு ஜனஷா இருந்தால் நாம் எப்படி கவலையுடன் அல்லாஹ்வை நாடுகிறோமோ அதேப்போல் அவர்களையும் நம் பிள்ளைகளாக என்னி கவலைக்கொள்வோம்.
குறிப்பு இந்த பெருநாளில் நான் ஆடம்பரம் இல்லாமல், பேஸ்புக்கில் வழக்கத்திர்க்கு மாராக என் போட்டோக்களை பதியாமல், பாலஸ்தீன் களுடைய உணர்வுகளையும், துயர்வுகளை மட்டும் என்னல் முடிந்தவரைக்கும் உலகத்திர்க்கு எத்திவைக்கும் முகமாக செய்துவருகிறேன்.
என்றும் பாலஸ்தீன மக்களின் ஒருவனாக.
அ.அஹமது மொய்தீன்.
சகோதரர்களுக்கு .......செக்கடி மேடு என்ற ஒரு குறிப்பிட்ட தெரு அதிரை வாசிகளால் நடத்தப்படும் இந்த மந்தி விருந்து மாற்று தெரு சகோதரர்களால் அதிகம் விமர்சிக்கபடுவதாக எண்ணுகின்றேன்.....
ReplyDeleteஅதை தவிர்க்கவும் வாழ்க ஊர் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் .......நாம் அனைவர்களையும் அல்லாஹ் கருத்து ஒற்றுமை உள்ள மக்களாக ஆகிவைக்க அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .....
பாலஸ்தீன சகோதரர்களுக்கு அனுதாபம் தெரிவித்து நாம் அவர்களுக்கு பலவகையில் உதவக் கடமைப் பட்டு இருக்கிறோம். நமது துஆக்களில் அவர்கள் நலனுக்காக - மறு வாழ்வுக்காக- அமைதிக்காக பிரார்த்திப்போம்.
ReplyDeleteஆனால் ஒன்றை வேதனையுடன் குறிப்பிடுகிறேன். இந்த உணர்வு அரபு நாடுகளின் கொழுத்த பணக்கார ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்து இருந்தால் பெருநாள் அன்று வண்ணத்தோரணங்களும் வானவேடிக்கைகளும் நடந்து இருக்குமா?
துபாயில் வெடிக்கப்பட்ட ஒரே ஒரு வகை வாணவேடிக்கைக்கு ஆனா செலவு கூட இந்த மந்தி விருந்துக்கு ஆகி இருக்காது. அரபு நாடுகளின் இத்தகைய பணத்திமிர் பிடித்த வேடிக்கைகளையும், ஊருக்கு ஊர் நடக்கும் கந்தூரி கொண்டாட்டங்களையும் நிறுத்த நம்மால் முடியவில்லையே.
பெருநாளைக்கு அடுத்த நாள் முத்துப் பேட்டை அல்லோகலப்பட்டது. அரபி அப்பா பள்ளி கந்தூரி கொடி ஊர்வலம். தாரை தப்பட்டை, ஆட்டம் பாட்டம், பேண்டு வாத்தியம் இத்யாதி இத்யாதி. ....
உண்மையில் பணக்கார அரபு நாடுகள் தங்களின் உணர்வைக் காட்டி இருந்தால் குறைந்த பட்சம் உயிர்ப்பலியாவது நிறுத்தப் பட்டு இருக்கும்.
அதிரை நண்பர்களின் மந்தி விருந்து நிருத்தபடுவது ஐ நா சபையால் கவனிக்கபடப் போகிறதா? அல்லது அரபு லீக் என்று வைத்து வெறும் காகிதத்தில் கண்டனத் தீர்மானம் போடுகிறார்களே அவர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது சரித்திரத்தில் இடம் பெறுமா?
நான் அறிந்தவரை இந்த மந்தி விருந்தை ஏற்பாடு செய்தவர்களும் பாலஸ்தீனப் பிரச்னையில் உணர்வுப் பிழம்பாகவே இருக்கிறார்கள். ( நான் கலந்து கொண்டேனாஎன்று கேட்காதீர்கள்- இல்லை எனக்கு அழைப்பு இல்லை ) ஆனாலும் ஒரு வேலை அவர்களது மகிழ்வுக்குத் தடை போடா வேண்டாம் என்பது எனது கருத்து.
அந்த சங்கமத்தில் பரிமாரபப்ட்டது மந்தி உணவு மட்டுமல்ல சமுதாய உணர்வுகளும்தான்.
அல்லாஹ்வால் ஏற்றுகொள்ளபட்ட வழிகளை நாம் பின்பற்றுகின்றோமா ?
ReplyDeleteசற்றே சிந்தியுங்கள் ................
ஊருக்கு ஒரு அமைப்பு .........தெருவுக்கு ஒரு அமைப்பு ...........பண மமதை .......
மக்களிடம் அதிகம் காணப்படும் கருத்து வேறுபாடுகள் ...........
அமைப்புகளில் சேர்ந்தால் தன்னுடைய சுயநல காரியங்களை அதிகாரத்துடன் சாதிக்கலாம் என்ற நர்பாசை .......
தெரு பாகுபாடு ................உண்மையை வெளிப்படையாக சொல்லுபவர்களை பைதியகாரர்களாக சித்தரிக்கும் ராஜதந்திரம் ..........
ஊரின் பிரபலங்கள் என்று கூறிக்கொள்ளும் முக்கியஸ்தர்களின் விளம்பர பிரியம் ............அடுக்கலாம் அடுக்கலாம் அடிக்கிக்கொண்டே போகலாம் ...........
குடும்ப அரசு நடத்தும் அரபுக்கள் .........மற்றும் அதை சார்ந்த பெட்ரோல் வளம் கொழிக்கும் குட்டி நாடுகள் ..............
அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடாமல் அமெரிக்கர்களை நம்பும் அரபு நாடுகள் ..............
யா அல்லாஹ் எங்களை நல்வழி படுத்துவாயாக
......ஆமீன் .....