இந்த நிலையில் பரஞ்சோதிராமநாதன், மாமனார் ஆறுமுகம் (62) மாமியார் சரஸ்வதி (55) ஆகியோர் திவ்யாவிடம் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரை சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யாவை தாய் வீட்டில் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு, பட்டினி போட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேலைக்கார பெண் மூலம் திவ்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து வாட்டாத்திகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வாட்டாத்திகோட்டை போலீசார் வீட்டுச் சிறையில் இருந்த திவ்யாவை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
பின்னர் திவ்யாவின் பெற்றோர் பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, திவ்யாவின் கணவர் பரஞ்சோதி ராமநாதனையும், மாமனார் ஆறுமுகத்தையும் சப்–இன்ஸ்பெக்டர் சரசு கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மாமியார் சரஸ்வதி மற்றும் திவ்யாவின் பெண் குழந்தை ஜோதி சரண்யாவையும் தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திவ்யா கூறியதாவது:–
நான் பி.எஸ்.சி அக்ரி படித்துள்ளேன். 19 வயதிலேயே திருமணம் ஆனது. 2009 ஆகஸ்ட் 30–ந்தேதி திருமணம் நடந்தது. 2011ல் குழந்தை பிறந்தது. ஆரம்ப காலத்தில் என்னோடு அன்பாக இருந்த என் கணவர் பின்னர் மாமியார் சரஸ்வதி, மாமனார் ஆறுமுகம் தூண்டுதலினால், அவர்களோடு சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்த தொடங்கினார். என் திருமணத்தின் போது வரதட்சணையாக போட்ட 40 பவுன் நகைகளையும் பிடுங்கி கொண்டனர். ஜாதகம் சரி இல்லை என தாலியையும் வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டனர். எனக்கு ஒரு வேளை கூட சாப்பாடு தராமல் சமையல் அறையிலும், குளியலறையிலும் பூட்டி வைத்தனர். என் மகளையும் வலுக்கட்டாயமாக என்னிடம் பேச விடாமல் மிரட்டி, தடுத்தனர். என்னை யாருடனும் பேச விடாமலும், என் பெற்றோரை சந்திக்க விடாமலும் என்னை ஒரு அடிமையை போல நடத்தினர். அதற்கு என்னுடைய கணவரும் உடந்தையாக இருந்தார்.
கடந்த 11–ந்தேதி 25 பவுன் நகையும், ரொக்கம் 10 லட்சம் ரூபாயும், என் பெயருக்கு சொத்தும் பிரித்து வாங்கி வா என அடித்து கொடுமைப்படுத்தினர். வெற்று பத்திரத்திலும் மிரட்டி கையொப்பம் வாங்கினர். ஒரு முறை மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றனர். என் மகள் காலை கட்டி பிடித்து அழவே விட்டு விட்டனர். இங்கு நடக்கும் சம்பவங்கள் பெற்றோருக்கு தெரிந்தால் மனம் வேதனைப்படுவார்கள் என இத்தனை காலம் சகித்துக் கொண்டிருந்தேன். கொடுமை எல்லை மீறவே என் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்னை போலீசாருடன் வந்து மீட்டு வந்தனர் என கூறினார்.
செய்தி : மாலை மலர்
படம் : பட்டுகோட்டை நியூஸ் டைம்
இந்த கொடுமைக்கார கணவன் குடும்பத்தையும் கனவனையும்
ReplyDeleteகண்டிப்பாக சட்டம் தண்டித்தே ஆகவேண்டும்
சட்டம் தன் கடமையெ செய்யுமா???
You are correct....
Delete