முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அன்றைய நாள் முதல் சுப்பிரமணியனை தினமும் ஒவ்வொரு ஆவனங்களை கேட்டு அலையவிட்ட கிராம நல அதிகாரிகள் இறுதியாக கடந்த 21.07.2014 திங்கள் அன்று சுப்பிரமணியன் வீட்டை கிராம நல அலுவலர் சீதா லட்சுமி தலைமையில் மூன்ற பெண் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணியத்திடம் இதில் நிறைய பணிகள் இருப்பதாகவும், பத்தாயிரம் வரை செலவு இருப்பதாகவும் அலுவலர் சீதா லட்சுமி, சுப்பிரமணியத்திடம் பத்தாயிரம் பணம் கொண்டு வரும் படி கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற சுப்பிரமணியன் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு அலுவலர் சீதா லட்சுமி சும்மா சும்மா இங்கு வர கூடாது. இறுதியாக எட்டாயிரம் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவி பணம் பெற்று தருவேன் என்று கோபமாக கூறி உள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மாரிசெல்வி ஆகியோர் நேற்று முன்தினம் 24.07.2014 தேதி மீண்டும் அலுவலர் சீதா லட்சுமியை நேரில் சந்தித்த போது மீண்டும் அதே பாணியில் அலுவலர் சீதா லட்சுமி கூறி திருப்பி அணுப்பி உள்ளார். இதனால் மன உலைச்சல் அடைந்த சுப்பிரமணியன், நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சிவஞான வடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி அலுவலர்கள் ரவி சந்திரன், பாண்டியன், சந்திரபாலன், அன்பழகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2.30 மணிக்கு அலுவலகத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுப்பிரமணியத்திடம் ரசாயணம் தடவிய ரூபாய் 8 ஆயிரம் பணங்களை கொடுத்து அனுப்பினர். அலுவலர் சீதா லட்சுமி பணத்தை பெற்று கொண்டு நாளை மீண்டும் ஒரு சான்று கொண்டு வரும் படி கூறினார். இதனை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பல மணி நேரம் சோதனையிட்டு அலுவலர் சீதா லட்சுமியை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்த நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அலவலர் சீதா லட்சுமியின் கணவர் சேகர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டி பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்பொழுது திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளாராக உள்ளார். இச்சம்பவம் செய்தி மக்கள் மத்தியில் பரவியதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபர்பபு எற்பட்டு உள்ளது.
படம் செய்தி:
1. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அலுவலர் சீதா லட்சுமி.
2. அலுவலகத்தை சோதனையிடும் அதிகாரிகள்.
3. புகார் கொடுத்த சுப்பிரமணியன்.
செய்தி மற்றும் படங்கள் :
முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை
படம் செய்தி:
1. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அலுவலர் சீதா லட்சுமி.
2. அலுவலகத்தை சோதனையிடும் அதிகாரிகள்.
3. புகார் கொடுத்த சுப்பிரமணியன்.
செய்தி மற்றும் படங்கள் :
முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.