.

Pages

Thursday, July 17, 2014

ரமலான் சஹர் உணவுக்காக அதிரை மீன் மார்க்கெட்டுக்கு பிரத்தியகமாக விற்பனைக்கு வரும் கொடுவா மீன்கள் !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்குள்ள கடல்பகுதிகளில் பிடிபடும் கொடுவா மீன்களை அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிக ருசியைத்தரும் கொடுவா மீனை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

இது குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறுகையில்...
'அதிரையை சுற்றி காணப்படும் கடல் பகுதியிலிருந்து ஏலத்திற்காக இங்கு கொண்டுவரப்படும் கொடுவா மீன்களை வெளியூர்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் உள்ளூர் வியாபாரம் பாதிப்படைகிறது. புனித ரமலான் மாதத்தில் சஹர் உணவுக்காக கொடுவா மீன்னை விரும்பி சாப்பிடும் உள்ளூர் மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு நேரடியாக துறைமுகத்திற்கு சென்று பிரத்தியகமாக கொடுவா மீன்களை விற்பனைக்காக வாங்கி வந்துள்ளோம். இந்த மீன்களை உள்ளூர் மக்களுக்கு மாத்திரம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் கொடுவா மீன்களை உள்ளூர் மக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்' என்றார்.


  

5 comments:

  1. அடடா, கொடுவா மீனுலோ, எப்படி செய்தாலும் சுவையே தனிலோ, எப்படியும் ஆயிரத்துக்கு மேல்தான் இந்த மீன்களெல்லாம் விக்குது, காசு உள்ளவுக வாங்கி சாப்பிடுராகுக, காசு இல்லாதவக கனவில்கூட பார்க்க முடியாம வாடுருராகுக..

    எனக்கெல்லாம் வெளிநாட்டிலுருந்து காசு பணம் வந்தால் நானும் வாங்கி சாப்பிடுவேன், இல்லாட்டி காரப்பொடி, கத்தாலம்பொடி, சூரப்பொடி இதைத்தான் வாங்கி சாப்பிடமுடியும், அதுகளும் லேசான விலையா விக்குது? அம்மாடியோவ், நெருப்பு விலை.

    எனக்கு பொறந்தது எல்லாம் பொட்டப்புள்ளே, கஷ்டப்பட்டு உழைத்து சிட்டுக்குருவி மாதிரி சேர்த்துவைத்த பணத்திலே மணக்கட்டு வாங்கி வீடு கட்டி பொம்பள புள்ளைகளுக்கு கொடுத்துட்டேன், மருமகன் கால் மேல் கால்போட்டு மரியாதை இல்லாமல் இருக்கின்றான். என்னை காட்டுப்பள்ளியில் போய் படுக்கச் சொல்றான்.

    எனக்கு ஒரு மகன் பிறந்து இருந்தால், அவனுக்கு பாசுபோட்டு எடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அவன் அனுப்புற காசுலே நாளைய தினத்தை யோசிக்காமே கண்ணை மூடிக்கொண்டு சொல்ற விலையை கொடுத்து இந்த மாதிரி கொடுவா மீனை வாங்கி சாப்பிடுவேனே.

    மகனா, இனி எங்கே பிறக்க போறான்.

    ReplyDelete
  2. இங்கு துபாய்ல இப்போ மீனு வரத்து ரொம்ப குறைஞ்சி போச்சி நல்ல மீனுக வரமாட்டேங்குது. அதனால சஹுருக்கு தினமும் சாம்பாரும் கோழிப் பொரியலுமாத்தான் போவுது . இந்த மாதிரி மீனு இங்கே கெடச்சா தங்கமாக்கும்.

    ReplyDelete
  3. கொடுவாமீனு அநேகம் விலை இறைச்சியை விட கூடுதலாகவே இருக்கும் என நினைகின்றேன் ....சிம்பிள் சமையல் பச்சை மிளகாய்.கருவேப்பிலை ,தக்காளி ,புளி அப்படியே போதுமான மசாலா தூள் ரெண்டு கொதியிலே வெந்துடும் ...முக்கியம் சோறு சுட சுட இருக்கணும் கூடவே முருங்கை கீரை கூட்டு வதக்கியது ......ம்ம்ம் அந்தமாதிரி இருக்கும் .

    ReplyDelete
  4. அதிரை போஸ்ட் மென் அவர்களுக்கு ....புரிகிறது உங்களின் ஆதங்கம் அல்லாஹ் உங்களின் கஷ்ட்டங்களை நீங்கிட நோன்புடன் துஆ செய்கின்றேன் .

    //எனக்கு பொறந்தது எல்லாம் பொட்டப்புள்ளே, கஷ்டப்பட்டு உழைத்து சிட்டுக்குருவி மாதிரி சேர்த்துவைத்த பணத்திலே மணக்கட்டு வாங்கி வீடு கட்டி பொம்பள புள்ளைகளுக்கு கொடுத்துட்டேன், மருமகன் கால் மேல் கால்போட்டு மரியாதை இல்லாமல் இருக்கின்றான். என்னை காட்டுப்பள்ளியில் போய் படுக்கச் சொல்றான்.//

    அநேகம் மருமகன் தவ்ஹீது வாதியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது உங்களையும் காட்டுப்பள்ளி தர்காவில் போய் படுக்க சொல்லி இருக்க மாட்டார் என்றே நினைகின்றேன் .....அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கட்டும் .அமீன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.