.

Pages

Friday, July 25, 2014

அதிரை கடல் பகுதிகளில் சிக்கும் அல்வா பாசி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை துறைமுக பகுதிகளிலிருந்து சில மீனவர்கள் கடலில் பாசிகளை பறிப்பதற்காக கடலுக்கு செல்கின்றனர். உவர் நீரில் பலவகை தாவர கூட்டங்கள் கடலுக்கு அடியில் உள்ளன. கரும்பு பாசி, பூ பாசி, கரும்பாசி, பூவந்தி பாசி, மரிக்கொழுந்து பாசி, வேர் பாசி, தாலை பாசி, பார் பாசி, கஞ்சி பாசி என பல வகையான பாசிகளும் கடலுக்கு அடியில் உள்ளன.

அதிரை கடலில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கடல் பகுதி வரை அதிகளவில் கஞ்சி பாசிகள் உள்ளன. கஞ்சி பாசியை அல்வா பாசி என்றும் கூறுவார்கள். இந்த வகை பாசி உணவுப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மறவக்காடு, அதிரை, சின்னமனை போன்ற துறைமுகங்களிலிருந்து சில மீனவர்கள் 10க்கும் மேற்பட்ட படகில் கஞ்சி பாசி பறிப்பதற்கு கடலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் கண்ணாடி அணிந்து கடலுக்குள் மூழ்கி கஞ்சி பாசியை பறிக்கின்றனர். மீனவர்கள் பறித்து வருகிற கஞ்சி பாசிகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மீனவர் செல்லையா கூறுகையில்... 
'மீன்வரத்து குறைவான நேரத்தில் கஞ்சி பாசி பறிப்பதற்கு கடலுக்கு செல் வோம். கடலில் 2 பாகத்தில் 20 அடி ஆழத்தில் கஞ்சி பாசி கள் இருக்கும். கண்ணாடி அணிந்து கடலுக்குள் சென்று கஞ்சி பாசிகளை பறித்து வருகிறோம். ஒரு கிலோ பாசி ரூ.3க்கு விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் இந்த பாசியை, மதுரைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஒரு தடவை பாசி பறிக்க சென்றால் 1 டன் எடை வரைக்கும் பாசி களை படகில் ஏற்றி வருகி றோம். அதற்குமேல் பட கில் ஏற்ற முடியாது. ஒரு படகுக்கு 3 பேர் செல்வோம். எல்லா நேரத்திலும் இந்த பாசி அகப்படாது. மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அதிகளவில் காணப்படும். மழை காலங்களில் இவ்வகை பாசி அகப்படாது. அலைகள் குறைந்த கடல் பகுதிகளில் மட்டும் தான் கஞ்சி பாசி அகப்படும். அதிரையிலிருந்து கட்டுமாவடி வரை கஞ்சி பாசிகள் அதிகம் காணப்படுகிறது' என்றார்.

செய்தி மற்றும் படங்கள் : 
அதிரை செல்வகுமார்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.