தஞ்சையில் ₹ 130 கோடி செலவில் ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’’ மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி கிளையின் 86-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் சங்க கூட்டம் சங்க அரங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலே மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், முன்னோடியாகவும் உள்ளது. அனைத்து துறைகளிலும் மருத்துவ துறை தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. அரசு மற்றும் தனியார் டாக்டர்களில் செயல்பாடுகள் தான் இதற்கு காரணம். டாக்டர்கள் தங்களது பணியை கடமையாக எண்ணி பார்க்காமல் சேவையாக கருதி செயல்பட வேண்டும். நோயாளிகளிடம் அன்பும், அரவணைப்போடும் டாக்டர்கள் பழக வேண்டும். அப்போது தான் மருத்துவமனையில் நோயாளிகள் தைரியமாக இருப்பார்கள். டாக்டர்களின் சேவையால் அவர்களது நோயும் குறையும்.
புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. தஞ்சாவூரில் ₹ 130 கோடி செலவில் ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’’ மருத்துவமனை அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. விரைவில் அமைக்கப்படும். மேலும் புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் தஞ்சாவூரில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.என்.ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஜஸ்டின், டாக்டர் காதர்சாகிப் ஆகியோர் வாழ்த்தி பேசினார். முன்னதாக தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார். முடிவில் டாக்டர் லட்சுமி கந்தசாமி நன்றி கூறினார்.
படம் : திருநெல்வேலி பல்நோக்கு மருத்துவமனையின் மாதிரி இணையத்தில் எடுக்கப்பட்டது.
நன்றி : தினத்தந்தி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.