.

Pages

Tuesday, January 27, 2015

பேராவூரணியில் தேசிய வாக்காளர் தின விழா !




26/01/2015 நேற்று பேராவூரணியில் தேசிய வாக்காளர் தின விழா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.வட்டாட்சியர் மாணிக்கவள்ளி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை வட்டாட்சியர் மாணிக்கவள்ளி வழங்கினார்.

 விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் மு.சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியை லோகாம்பாள், ஆக்ஸ்போர்டு தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், ரெத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 பேராவூரணி அருகே வலப்பிரமன்காடு பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர். பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.


செய்தி எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

1 comment:

  1. வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடத்துவது வாக்களார்கள் தங்கள் ஓட்டை செலுத்த வேண்டும் என்பதை வழிவுர்த்திதான். ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கன்னு சொன்னாலும், 144 தடை உத்தரவை மீறி ஒரு ஓட்டுக்கு 1000/- பணம்பட்டுவாடா செய்யப் படுகிறது, இப்படி செய்யப்பட்டதால் இப்ப தமிழ் நாட்டின் அவல நிலைமை காணப் படுகிறது. போட்டி இட கடைசிநாள் என்று அறிவிப்பது போல பணம் கொடுக்க கடைசி நாள் என்று அறிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.