.

Pages

Sunday, January 25, 2015

அதிரையில் விற்பனைக்கு வந்த கத்தரிக்காயில் பொறிக்கப்பட்ட அரபி எழுத்தால் பரபரப்பு !

அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது இப்ராஹீம். இன்று காலை சமைப்பதற்காக மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கியுள்ளார். இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து நறுக்கும் போது, கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் அரபி எழுத்துகளுடன் காணப்படும் கத்தரிக்காயை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து 'முஹம்மது இப்ராஹீம்' நம்மிடம் கூறுகையில்...
'கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்த நான் உடனே உள்ளூர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இரண்டு துண்டாக நறுக்கிய கத்திரிக்காயை எடுத்துச் சென்று காட்டினேன். பார்வையிட்ட அவர்கள் இவை அரபி எழுத்துதான் என்று கூறினார்கள்' என்றார்.

இதுகுறித்து மார்க்க அறிஞர்கள் கூறும் போது...
'சிலர் கத்தரிக்காயில் அல்லாஹ் பெயர், மாங்காயில் அல்லாஹ்வின் பெயர்,
தேங்காயில் அல்லாஹ்வின் பெயர், உடலில் அல்லாஹ் அல்லது நபி பெயர், மேகத்தில் அல்லாஹ் அல்லது நபி பெயர் என இது போன்ற செய்திகளை எல்லாம் இஸ்லாத்தின் அதிசயம் என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இறைவன் குர்ஆனில் எதை சொல்லியிருக்கிறானோ, இறைவனின் ரசூல் (ஸல்) அவர்கள் எதை நமக்கு நடைமுறைப் படுத்தியிருக்கிறார்களோ அதை மட்டும் பின்பற்றுங்கள்' என்கின்றனர்.

4 comments:

  1. யா அல்லாஹ் .. மனிதர்களை இது போன்ற மடமையில் இருந்து காப்பற்றி அருள் புரிவாயாக ..ஆமீன்
    இறைவனுக்கு அனைத்து மொழிகளும் தெரியும் அவன் அனைத்தையும் அறிந்தவன் ....இஸ்லாம் மார்க்கம் என்பது மனிதர்களின் உண்மையான 'ஈமான்' என்ற அவர்களுடைய எண்ணம் சம்பந்தப்பட்டது..அரபி மொழியை மட்டும் புனிதம் என்று கருதுவது மனிதர்களின் அறியாமை.

    ReplyDelete
  2. கத்தரிக்காயில் உள்ள விதை அது
    யார் சொன்னது அது அரபி எழுத்து என்று .
    ஒரு ஆலீமோ அல்லது ஹாபிலோ அதை படிச்சு அர்த்தம் சொல்லட்டும் என்ன வென்று.
    அரபி எழுத்தை பற்றி தெரியாத மூடர்களை அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
    நமது ஊரில் இன்றும் கீழே சிறிய அரபி பொறிக்கப்பட்ட துண்டு காஹிதம் கிடந்தாலும், அதில் ஷைத்தான் என்று எழுதி இருந்தாலும், அதை எடுத்து முத்தம் குடுத்து பaக்கெட்ல வைத்து கொள்ளும் நபர்கள் திரிந்து கொண்டுதான் இருகிறார்கள்.

    தயவு செய்து குர்ஆணை ஊதுங்கள் அர்த்தத்தை படியுங்கள்

    நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  3. அரபு எழுத்துக்குள்ள மரியாதை எப்படி மறுக்கமுடியும் ! வேதம் வந்த மொழிக்கு என்றும் மரியாதைத்தான். தாங்கள் கருதும் ஷைத்தான் என்ற வார்த்தைகள் இவ்வூரில் கீழே கிடப்பது என்பது ஏற்கமுடியாது. அரபு நாட்டில் வேண்டுமானால் இருக்கலாம். இங்கு வேதம், ஹதீஸ் இதுப் போன்ற தொடர்புடைய அரபு வார்த்தைதான் கீழே கிடக்க இயலும். அதையெடுத்து கண்ணியம் செய்வது இஸ்லாமியனின் கடமை. வேதம் வந்த மொழி சிறப்பிற்குரியதே.

    ReplyDelete
  4. மரியாதை குடுக்க வேண்டியது அல்லாஹுவின் வார்த்தையான குர்ஆணுக்கே தவிர அரபு எழுத்துக்கு அல்ல. அரபு என்பது மொழி

    தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்
    விவாதம் வேண்டாம்

    தங்களுக்கு சந்தேகம் ஏர்பட்டால் நமது ஊரில் உள்ள நல்ல தெளிவாக கற்று அறிந்த உலமாகளை கேளுங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.