அதிரையில் லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் - தஞ்சை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று 31-01-2015 காலை நமதூர் காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, அப்துல் ஹக்கீம்,கெளசல்யா, விஜயா, கிருஷ்ண மூர்த்தி, அனிதா குமாரி மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டோருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 12 பேருக்கு நோயின் ஆரம்ப நிலை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தொடர் சிகிச்சை தஞ்சை கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முகாமில் அதிரை லயன்ஸ் சங்கத்தின் பொறுப்பு தலைவர் N.U. ராமமூர்த்தி, செயலாளர் பேராசிரியர் முனைவர் N.M.I.அல் ஹாஜி, பொருளாளர் N. ஆறுமுகசாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர், பேராசிரியர் மேஜர் S.P. கணபதி, சாரா அஹமது, பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் S.M. முஹம்மது மொய்தீன், வளர்ச்சி தலைவர் S.A. அப்துல் ஹமீது, பேராசிரியர் முருகானந்தம், ராஜேந்திரன், செல்வராஜ், முல்லை மதி, முஜீப், தமீம் அன்சாரி உள்ளிட்ட லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சிராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.
மேலும் முகாமில் கலந்துகொண்டருக்கு காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் வேண்டிய உதவிகளை செய்தனர்.
முன்னதாக பள்ளி மாணவிகள் மருத்துவம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, அப்துல் ஹக்கீம் ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். இதில் சிறப்பான கேள்வி எழுப்பிய மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.